ஒரு நாள் போட்டியில் '200' ரன்கள்.. கிறிஸ் கெயில் ரெக்கார்டை துவம்சம் செய்து வங்காளதேச அணிக்கு ஷாக் கொடுத்த இஷான் கிஷான்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பைத் தொடர், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை முடித்து விட்டு இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்கள் ஆடி வருகிறது.
இதில் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி, தொடரை கைப்பற்றி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா காயம் காரணமாக மூன்றாவது போட்டியில் இடம்பெறாமல் போனதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷான் மூன்றாவது போட்டியில் களமிறங்கி இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் குவித்த இஷான் கிஷான், ஒரு நாள் போட்டியில் தனது முதல் சதத்தை அடித்ததுடன் மட்டுமில்லாமல் அதனை இரட்டை சதமாகவும் மாற்றி சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
85 பந்துகளில் 100 ரன்கள் அடித்த இஷான் கிஷான், 131 பந்துகளில் 210 ரன்கள் (24 ஃபோர்கள், 10 சிக்ஸர்கள்) எடுத்து அவுட்டாகி இருந்தார். இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர், ரோஹித் ஷர்மா (2 முறை), கப்தில், சேவாக், கெயில், பகர் சமான் உள்ளிட்டோர் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தற்போது இஷான் கிஷானும் இந்த சாதனையை படைத்துள்ள நிலையில், குறைந்த பந்துகளில் 200 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் தன் வசமாக்கி உள்ளார்.
அதே போல, விராட் கோலியும் சுமார் 40 மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் சதமடித்துள்ளார். 113 ரன்கள் எடுத்து விராட் கோலி அவுட்டான நிலையில், அவரும் இஷான் கிஷானும் சேர்ந்து, 2 ஆவது விக்கெட்டுக்கு 290 ரன்கள் சேர்த்து சாதனை படைத்திருந்தனர். மேலும் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியும் 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 409 ரன்கள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்