Oh My Dog
Anantham Mobile

"ஆமா.. பந்து எங்கதான் பட்டுது..?"..! ஆனா இப்படி அவுட் ஆவோம்னு கொஞ்சம் கூட நெனச்சிருக்கமாட்டாரு.. சோகமாக வெளியேறிய IPL வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் வித்யாசமாக அவுட்டான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

"ஆமா.. பந்து எங்கதான் பட்டுது..?"..! ஆனா இப்படி அவுட் ஆவோம்னு கொஞ்சம் கூட நெனச்சிருக்கமாட்டாரு.. சோகமாக வெளியேறிய IPL வீரர்..!

ஐபிஎல் (IPL) தொடரின் 37-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (LSG) அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக அந்த கேப்டன் கே.எல்.ராகுல் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனை அடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இதில் இஷான் கிஷன் 8 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த டெவால்ட் ப்ரீவிஸ் 3 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் ரோகித் சர்மா கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆனாலும் 39 ரன்கள் எடுத்து ரோகித் சர்மா அவுட்டாக, அவரை தொடர்ந்து திலக் வர்மாவும் 38 ரன்களில் வெளியேறினார். இந்த இக்கட்டான சமயத்தில் கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பொல்லார்டு 19 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனை அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே மும்பை அணி எடுத்தது. அதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இப்போட்டியில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் வித்தியாசமாக அவுட்டான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், போட்டியின் 8-வது ஓவரை லக்னோ அணியின் ரவி பிஷ்னோய் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட இஷான் கிஷனின் பேட்டில் பந்து பட்டு எட்ஜாகி விக்கெட் கீப்பர் டி காக்கின் காலில் பட்டு பவுன்ஸ் ஆனது.

அப்போது ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஜேசன் ஹோல்டர் கேட்ச் பிடித்தார். உடனே லக்னோ வீரர்கள் அம்பயரிடம் அவுட் அப்பீல் செய்தனர். ஆனால் பந்து எங்கு பட்டது என்று சரியாக தெரியாததால், மூன்றாம் அம்பயரிடம் ரிவியூ கேட்கப்பட்டது. அப்போது பந்து டி காக்கின் காலில் பட்டது தெளிவாக தெரிந்தது. அதனால் மூன்றாம் அம்பயர் அவுட் என அறிவித்தார். இதனை அடுத்து இஷான் கிஷன் சோகமாக பெவிலியன் திரும்பினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இஷான் கிஷன் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி இவரை அதிக விலை (ரூ. 15.25 கோடி) கொடுத்து வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: https://www.behindwoods.com/bgm8/

MUMBAI-INDIANS, IPL, MIVLSG, ISHANKISHAN

மற்ற செய்திகள்