'ரெய்னா'வுக்கு அடிக்கப் போகும் 'ஜாக்பாட்'??,.. புதிய 'கேப்டன்' அவரு தானா??... "இது வேற 'லெவல்' ட்விஸ்ட்டா இருக்கே"!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படலாம் என தெரிகிறது.
இந்நிலையில், அடுத்த சீசனுக்காக தற்போதுள்ள 8 அணிகளுடன் புதிதாக ஒரு அணி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது. புதிதாக அணி அமையும் பட்சத்தில் நிச்சயம் அந்த அணிக்காக வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவார்கள். இந்நிலையில், அந்த ஒன்பதாவது அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த சுரேஷ் ரெய்னா, இந்தாண்டு துபாய் வந்த நிலையில், திடீரென தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தொடரில் இருந்து விலகுவதாக கூறி ஒரு போட்டிகளில் கூட பங்கேற்காமல் இந்தியா திரும்பினார். ஆனால், சென்னை அணி நிர்வாகத்திற்கும், ரெய்னாவிற்கும் ஏதோ பிரச்சனை ஏற்பட்டதால் தான் அவர் இந்த முறை விலகியதாக தகவல் பரவி பரபரப்பை உண்டு பண்ணியது.
இதனால் அடுத்த சீசனில் ரெய்னா, சென்னை அணியில் இணைவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. அல்லது அவர் வேறு அணிக்காக அடுத்த ஆண்டு இடம்பெறுவாரா என்றெல்லாம் யூகங்கள் கிளம்பியது. இதனையடுத்து, அடுத்த சீசனில் குஜராத் அல்லது அஹமதாபாத்தை மையமாக வைத்து புதிய அணி உருவாகினால் ரெய்னாவின் அனுபவத்தைக் கொண்டு அந்த அணியின் கேப்டனாக அவர் செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதுவே மாற்றாக, புதிய அணியின் உரிமையாளர்கள் இளம் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களை கொண்டு அந்த அணியைக் கட்டமைக்க விரும்பினால் ரெய்னாவுக்கு இடம் கிடைக்காமல் கூட போகலாம். ஐபிஎல் தொடரில் புதிய அணி குறித்த தகவல் உறுதியானால் தான் ரெய்னா எந்த அணியில் இடம்பெறுவார் என்பது குறித்த விவரம் தெரிய வரும்.
சென்னை அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத நிலையில், சென்னை அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்