RRR Others USA

இது தோனிக்கு கடைசி சீசனா? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் சொன்ன பதில்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனியின் தலைமையில் CSK…

இது தோனிக்கு கடைசி சீசனா? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் சொன்ன பதில்!

இதுவரையிலான ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வருகிறது. இதுவரை 4 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ள அந்த அணிக்கு தோனி கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

வாவ்… செம்ம தகவல்- ஹல்வா, குலோப்ஜாமூனுக்கு எல்லாம் இதுதான் தமிழ் பெயராம்!

சிஎஸ்கே அணிக்கு 12 ஆண்டுகளாக கேப்டனாக தோனி தலைமை தாங்கியுள்ள அவர் இதுவரை 200 போட்டிகளுக்கும் மேல் கேப்டனாக இருந்த ஒரே ஒரு வீர்ர என்ற சாதனையைப் படைத்துள்ளார். கடந்த ஆண்டு அவர் தலைமையில் சி எஸ் கே அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.  இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் அணிக்குள் ஒரு வீரராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தோனி மற்றும் சி எஸ் கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Is IPL 2022 last season of dhoni exclusive update

புதுக்கேப்டன் ஜடேஜா

புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஜடேஜா. சி எஸ் கே அணியின் தூண்களில் ஒருவராக திகழ்ந்துவருகிரார். ஜடேஜா கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஆண்டு தோனியை விட அதிக தொகைக்கு இவர் தக்க வைக்கப்பட்டார். கேப்டன்சி பொறுப்பு பற்றி பேசியுள்ள அவர் ‘என் கூட தோனி இருக்கார். எனக்கு எந்த சந்தேகமா இருந்தாலும் அவரிடம் செல்வேன். அதனால் எந்த அழுத்தமும் இல்லை’ எனக் கூறியுள்ளார். புதிதாக கேப்டன் பொறுப்பேற்றுள்ள இவருக்கு பலரும் வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர்.

Is IPL 2022 last season of dhoni exclusive update

தோனியின் கடைசி சீசனா?

தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வீரர்களில் வயது மூத்த வீரராக தோனி இருக்கிறார். தற்போது 40 வயதாகும் அவர் இன்னும் எத்தனை சீசன்களில் விளையாடுவார் என்ற சந்தேகமும் விவாதமும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் கேப்டன் பொறுப்பை விட்டு விலகியுள்ளதால் ‘இந்த ஆண்டுதான் அவரின் கடைசி ஐபிஎல் சீசனா?’ என்று கேள்விகள் எழுந்தன.

Is IPL 2022 last season of dhoni exclusive update

இந்நிலையில் சி எஸ் கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் இதுபற்றி பேசியுள்ளார். அதில் ‘இது தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று நான் நம்பவில்லை. அவர் இந்த சீசனுக்குப் பிறகும் தொடர்வார் என்றே நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார். காசி விஸ்வநாதனின் இந்த பதில் தோனி ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்தது போல அமைந்துள்ளது.

கேப்டனாக இல்லாம.. சிஎஸ்கே அணிக்காக 'தோனி' ஆடிய ஒரே போட்டி.. நெகிழ வைத்த 'தல'.. இது எப்போங்க நடந்துச்சு?

CRICKET, CSK, MS DHONI, CSK TEAM, IPL, IPL 2022, CSK CEO, CSK CEO KASI VISWANATHAN

மற்ற செய்திகள்