David Warner : ஆஸிக்கு அடிமேல் அடியா.? 2வது டெஸ்டில் இருந்து விலகிய வார்னர்..! Border Gavaskar Trophy

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரிலும், 3 ஒரு நாள் போட்டி தொடரிலும் இந்திய அணியை எதிர்கொள்கிறது.

David Warner : ஆஸிக்கு அடிமேல் அடியா.? 2வது டெஸ்டில் இருந்து விலகிய வார்னர்..! Border Gavaskar Trophy

அந்த வகையில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூர் விதர்பா மைதானத்தில் நடைபெற்றது. இதில்  இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   இந்திய அணி வீரர்களின் சுழற்பந்து வீச்சு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவாலாக இருந்தது.  இதனைத் தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை துவங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முன்னதாக உஸ்மான் கவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம் 72 ரன்களும் நாட் அவுட்) எடுத்தனர். பின்னர் ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் எடுத்திருந்தது.  இதில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர் 15 ரன்களில் ஆட்டமிழந்தது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வீசிய தொடர் ஷார்ட் பந்துகளில், ஷமி வீசிய பந்து வார்னரின் கையில் பட, உடனே அவர் மருத்துவரை அழைக்க, பின்னர் அவரது கையில் பேண்டேஜ் போடப்படட்து. அதன் பின்னரும் முகமது சிராஜ் வீசிய பந்து வார்னரில் ஹெல்மெட், முதுகு & தலைப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போதும் தொடர்ந்து ஆடிய வார்னர், ஷமி பந்தை எதிர்கொண்டு, விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.  அதாவது 44 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 15 ரன்களின் வார்னர் சுருண்டார்.

அதன் பின்னரும் காத்திருந்த அதிர்ச்சிதான் பேரதிர்ச்சி. ஆம், அதன் பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்க, களத்தில் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ரன் கணக்கை தொடங்கி ஆட, இன்னொருபுறம் கையில் உண்டான காயம் காரணமாக வார்னர் பீல்டிங்கிற்கு வரவில்லை. அதாவது அவர் 2ஆவது டெஸ்ட் போட்டியில் மீதமுள்ள ஆட்டங்களிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வார்னருக்குப் பதிலாக சப்ஸ்டிட்டியூட் மேட் ரென்ஷா அணியில் சேர்க்கப்பட, 2ஆவது இன்னிங்ஸில் ரென்ஷா பேட்டிங் செய்ய வந்தார். எனினும் முதல் போட்டியில் இடம் பெற்ற ரென்ஷாவும் முதல் இன்னிங்ஸில் டக் அவுட், 2ஆவது இன்னிங்ஸில் 2 ரன்னில் என ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கேமரூன் க்ரீன் இந்த அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் காயத்தால் விலகியிருந்தார். 

தவிர ஜோஸ் ஹசல்வுட், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்டோரும் காயம் காரணமாக முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இது ஆஸிக்கு அடுத்தடுத்த அடிதான். பொறுத்திருந்து பார்ப்போம் என கிரிக்கெட் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

AUSVIND, INDVAUS

மற்ற செய்திகள்