"இதுக்காகத் தான் அவரு 'ஐபிஎல்' 'ஃபைனல்ஸ்' பாக்க வந்தாரா??... புதிய முடிவில் 'நடிகர்' மோகன்லால்??... வெளியான பரபரப்பு 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் சீசன் சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைபற்றியது.
அடுத்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு புதியதாக இன்னொரு அணியும் இடம்பெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 8 அணிகள் உள்ள நிலையில், அடுத்த ஆண்டில் 9 அணிகளுடன் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அந்த ஒன்பதாவது அணி குஜராத் பெயரில் செயல்படலாம் என தகவல் பரவி வரும் நிலையில், இந்த அணியை மலையாள நடிகர் மோகன்லால் வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இந்த சீசனின் இறுதி போட்டியைக் காண மோகன்லால் துபாய் வந்த நிலையில், அதற்கடுத்த நாட்களில் புதிய அணி உருவாகவுள்ளதாக கூறப்பட்டது.
இதனால், அந்த புதிய அணியை வாங்க வேண்டித் தான் மோகன்லால் துபாய் சென்று பிசிசிஐ அதிகாரிகளை நேரில் சந்தித்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால், நேரில் பேசி ஒரு அணியை வாங்குவது சாத்தியமா என்பது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
புதிதாக அணி உதயமானால், அந்த அணி குறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிடும். அதனைத் தொடர்ந்து, அதிக விலை கொடுப்பவர்களுக்கு அணியின் உரிமம் வழங்கப்படும். எனினும், புதிய அணி குறித்து அறிந்து கொள்ள வேண்டி அவர் துபாய் சென்றிருக்கலாம் என்றும் தகவல் கூறுகிறது.
ஆனால், இதில் உண்மை நிலை என்பது குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான அறிவிப்பு வெளியாகும் போது ஒன்பதாவது அணி குறித்தும், அந்த அணியை நடிகர் மோகன்லால் வாங்கவுள்ளாரா என்பது குறித்தும் உறுதிபட தகவல் வெளியாகலாம்.
ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்