”விராட் கோலிக்கு... 'இந்த' பந்துவீச்சாளர் மிகப்பெரிய சவாலாக இருப்பார்...!” - அடித்துக் கூறும் இர்பான் பதான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு இந்த போட்டி மிகவும் சவாலான போட்டியாக இருக்கும்.

”விராட் கோலிக்கு... 'இந்த' பந்துவீச்சாளர் மிகப்பெரிய சவாலாக இருப்பார்...!” - அடித்துக் கூறும் இர்பான் பதான்..!

இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கேப்டன் கோலிக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தை எதிர்கொள்வதில் சிறிது தயக்கம் இருக்கும் என்கிறார் இர்பான் பதான்

முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதான் இந்த தொடர் குறித்து கூறும்போது, இந்திய கேப்டன் விராட் கோலி ஒருபோதும் மிட்செல் ஜான்சனைப் போன்ற ஒருவரை எதிர்கொள்வதைப் பற்றி கவலைப்பட மாட்டார், ஆனால், அதே வேளையில், அவர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக விளையாடுவதில் சிறிது தயக்கத்துடனேயே தான் விளையாடுவார், என்கிறார்.

2014 ஆம் ஆண்டில் இந்தியா இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, ​​ஆண்டர்சன் இந்திய கேப்டனை நான்கு சந்தர்ப்பங்களில் ஆட்டமிழக்கச் செய்தார். கோலி தனது 10 இன்னிங்சில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால், 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு முற்றிலும் மாறுபட்ட பேட்ஸ்மேனாக வந்தார், கோலி. டெஸ்ட் தொடரில் 593 ரன்கள் எடுத்து அதிக ரன் அடித்த வீரராகவும், இரண்டு சதங்கள் மற்றும் மூன்று அரை சதங்களுடன் தனது பெயரை மிக அழுத்தமாக பதிவு செய்து கொண்டார்.

எந்தவொரு பேட்ஸ்மேனும் ஸ்விங் ஆகும் பந்தை எதிர்த்து நிற்க விரும்புவதில்லை. ஆனால் பந்து ஸ்விங் ஆகும்போது அதை கொஞ்சம் கச்சிதமாக தான் ஆட வேண்டும் என்று பதான் குறிப்பிடுகிறார். ஏனெனில், இது விளையாட்டில் மிகச் சிறந்தவர்களின் நுட்பத்தை சோதிக்கிறது.

நீங்கள் விராட் கோலியிடம் கேட்டுப்பாருங்கள், மிட்செல் ஜான்சன் வேகமாக பந்து வீசுவதைப் பற்றி அவர் ஒருபோதும் கவலைப்பட மாட்டார், ஏனென்றால் அது சரியான லைனில் வரும் அது அவருக்குத் தெரியும், ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் குறித்து அவருக்கு எப்போதும் சற்று தயக்கம் இருக்கும். பந்து ஸ்விங் ஆகும்போது உலகில் எந்த பேட்ஸ்மேனும் அதை சரியாக கணிக்க முடியாது.

ரிஷாப் பண்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் லாப் ஷாட் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடுவதை நாங்கள் கண்டிருக்கிறோம். வேகத்தால் மட்டுமே வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, ஏனென்றால் பேட்ஸ்மேன்கள் வேகத்துக்கு அஞ்ச மாட்டார்கள். ஸ்விங்கால் மட்டுமே ஒரு பேட்ஸ்மேனை அவுட் செய்ய முடியும். பேட்ஸ்மேன்களும் ஸ்விங் பந்துகளுக்கு மட்டுமே அஞ்சுவார்கள். ஏனென்றால், ஸ்விங் பந்து மட்டுமே கணிக்க முடியாத ஒன்று என்று இர்பான் பதான் குறிப்பிடுகிறார்.

மற்ற செய்திகள்