"எல்லாத்துக்கும் அவரு ஒருத்தரு தான் 'காரணம்'.. சும்மாவா அவர 'டீம்'ல இருந்து தூக்குனாங்க??.. வார்னரை கடுமையாக விமர்சித்த 'முன்னாள்' வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தினால், போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

"எல்லாத்துக்கும் அவரு ஒருத்தரு தான் 'காரணம்'.. சும்மாவா அவர 'டீம்'ல இருந்து தூக்குனாங்க??.. வார்னரை கடுமையாக விமர்சித்த 'முன்னாள்' வீரர்!!

இந்த சீசனில், கிட்டத்தட்ட பாதி லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதன் அடிப்படையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மொத்தமாக 7 போட்டிகளை ஆடியுள்ள ஹைதராபாத் அணி, ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு வரை, மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாக வலம் வந்த ஹைதராபாத் அணி, இந்த சீசனில் மிகவும் மோசமாக திணறி வருகிறது. ஒரு புறம் கடுமையான விமர்சனங்களை அந்த அணி சந்தித்து வந்த நிலையில், மறுபக்கம் வார்னரை கேப்டன் பதவியில் இருந்து கடைசி லீக் போட்டிக்கு முன்பாக நீக்கிய ஹைதராபாத் அணி நிர்வாகம், வில்லியம்சனை புதிய கேப்டனாக நியமித்தது.

தொடர்ந்து, கடைசி போட்டியில் வார்னர் (Warner) அணியிலும் இடம்பெறவில்லை. இந்த போட்டியிலும் ஹைதராபாத் அணி தோல்வியைத் தான் தழுவியிருந்தது. இந்நிலையில், இது பற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் இர்பான் பதான் (Irfan Pathan), 'டாப் 4 அணிகளில் ஒன்றாக, நான் ஹைதராபாத் அணியை நினைத்திருந்தேன். ஆனால், அவர்களின் ஆட்டம் அதிர்ச்சியளித்தது. அந்த அணியின் பெரிய பிரச்சனையே, வார்னரின் கேப்டன்சி தான். அவர் அணியைக் கையாண்ட விதம் மற்றும் பேட்டிங் செய்த விதம் என அனைத்தும் மிகச் சொதப்பலாக இருந்தது.

இதன் காரணமாக, வில்லியம்சனை புதிய கேப்டனாக ஹைதராபாத் நிர்வாகம் அறிவித்தது. வார்னரின் தலைமை மீது அணி நிர்வாகத்தினருக்கு அதிருப்தி இருந்தது என்பதற்கு இது தான் சான்று.

அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில், அனுபவ வீரர்கள் இல்லை என்பது மிகப்பெரிய குறை. அதே போல, தொடர்ச்சியாக 140 கி. மீ வேகத்தில் பந்து வீசக் கூடிய வீரர்கள், அந்த அணிக்கு கண்டிப்பாக தேவை' என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்