'காத்திருந்தது போதும்'... 'ஓய்வை அறிவித்த இந்தியாவின் அதிரடி ஆல்ரவுண்டர்'... ரசிகர்கள் அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

'காத்திருந்தது போதும்'... 'ஓய்வை அறிவித்த இந்தியாவின் அதிரடி ஆல்ரவுண்டர்'... ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான். இவர் கடந்த 2003ம் ஆண்டு  ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் அறிமுகமானார். இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக இதுவரை 29 டெஸ்டில் பங்கேற்று 100 விக்கெட்களை  கைப்பற்றியுள்ளார். 120 ஒருநாள் போட்டியில் 173 விக்கெட்களை  வீழ்த்தியுள்ளார். தவிர, 20 ஓவர் போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்களை சாய்த்துள்ளார்.

இதனிடையே  கடந்த 2012இல் நடந்த டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய பதான், அதன் பிறகு அணியில் இடம்பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. கடந்த 7 ஆண்டுகளாக அணியில் இடம் பெறாமல் இருந்த இர்ஃபான் பதான், இன்று தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு விடை கொடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் “லைவ் பேர்வெல் பதான் தி சுவிங் கிங்” நிகழ்ச்சியின் மூலம் மாலை 4:30 மணிக்கு தனது ஓய்வு முடிவை வெளியிட்டார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலர் என்ற வரலாறு படைத்தவர் பதான். இந்திய அணியின் வெற்றிக்கு பல வகைகளில் தனது பங்களிப்பை வழங்கிய பதானின் முடிவு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CRICKET, IRFAN PATHAN, RETIREMENT, T20, ODI