ஒரே ஓவரில்.. நியூசிலாந்து அணிக்கு ஷாக் கொடுத்த அயர்லாந்து 'வீரர்'.. "பந்து ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்"
முகப்பு > செய்திகள் > விளையாட்டு8 வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது ஒவ்வொரு போட்டியும் முழுக்க முழுக்க அனல் பறக்கும் வகையில் தான் சென்று கொண்டிருக்கிறது.
இதற்கு காரணம், அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் தற்போது சூப்பர் 12 சுற்றில் நடந்து வரும் ஒவ்வொரு போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் தான்.
மொத்தமுள்ள 12 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழந்த நிலையில், மற்ற அணிகளுக்கு சிறிய அளவிலாவது வாய்ப்பு இருப்பதால் ஒவ்வொரு போட்டிகளும் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் வகையில் தான் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வீரர் படைத்த சாதனையை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
குரூப் 1 சுற்றில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் தற்போது மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 61 ரன்கள் (5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்திருந்தார்.
தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணி, ஆரம்பத்தில் சிறப்பாக ஆடி ரன் சேர்ந்திருந்தாலும் நடுவே விக்கெட்டுகள் விழ தடுமாற்றம் கண்டது. இதனால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார் அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ்வா லிட்டில். இவர் வீசிய 19 ஆவது ஓவரில், வில்லியம்சன், நீஷம் மற்றும் சாண்டனர் ஆகியோர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார். நடப்பு டி 20 உலக கோப்பை தொடரில் இதற்கு முன்பு UAE வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் சாதனை புரிந்திருந்தார். அதனையடுத்து தற்போது அயர்லாந்து வீரர் ஜோஷ்வா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளார்.
டி 20 உலக கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது அயர்லாந்து வீரர் என்ற பெருமையையும் ஜோஷ்வா லிட்டில் பெற்றுள்ளார். கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இவரது சாதனையை பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்