‘குந்தவை’ த்ரிஷா, அமைச்சர் உதயநிதி, லோகேஷ் ..இன்னும் யாரெல்லாம்..? சிஎஸ்கே ஆட்டத்தில் களைகட்டிய சேப்பாக்கம்.!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காண்பதற்காக நடிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வருகை தந்த புகைப்படங்கள் வைரலாகிவ் வருகின்றன.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடி வருகிறது. முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற போட்டியினை காண்பதற்கு தோனி என்டர்டெயின்மென்ட் குழுவினர் சென்றிருந்தனர். அதாவது தோனி தயாரிப்பில் உருவாகும் தமிழ்ப்படமான எல்ஜிஎம் படக்குழுவினரான, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே இவனா, நதியா ஆகியோர் இப்போட்டியை காணச் சென்றிருந்தனர்.
தவிர நடிகர் சதீஷ், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் இப்போட்டியை காணச்சென்ற புகைப்படங்கள் வைரலாகி வந்தன. இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதக்கூடிய ஐபிஎல் போட்டியை காண்பதற்காக நடிகை திரிஷா, நடிகர் சதீஷ் பங்கு பெற்ற புகைப்படங்களும், இதே போல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்குபெற்ற புகைப்படங்களும் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன. இவர்களுடன் லவ் டுடே திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் இடம்பெற்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதே போல் இந்த போட்டிகளை காண்பதற்கு ஏராளமான ரசிகர்களும் திரண்டனர். இந்த போட்டியை காண வந்த திரை பிரபலங்கள் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. தவிர ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சொப்பன சுந்தரி திரைப்பட குழுவினரும் ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும் பிக் பாஸ் பிரபலமுமான மணிகண்டா ராஜேஷூம் இந்த ஐபிஎல் போட்டியை காண்பதற்கு படக் குழுவினருடன் வருகை தந்திருந்தனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பிலான சொப்பன சுந்தரி திரைப்படத்தின் பெயர் அச்சிடப்பட்ட டிஷர்ட்டுடன் இவர்கள் இப்போட்டியை காண வருகை தந்தனர். இப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்