'CSK-விலிருந்து நீக்கப்படவுள்ள 7 வீரர்கள்?!!'... 'ரன் குவிச்ச இவங்களுமா List-ல்???'... 'தொடர் சொதப்பலால் கடும் அதிருப்தியில் நிர்வாகம்!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கேவில் தற்போதுள்ள 7 வீரர்களை அதிரடியாக நீக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'CSK-விலிருந்து நீக்கப்படவுள்ள 7 வீரர்கள்?!!'... 'ரன் குவிச்ச இவங்களுமா List-ல்???'... 'தொடர் சொதப்பலால் கடும் அதிருப்தியில் நிர்வாகம்!'...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் சொதப்பல்கள் மற்றும் தோல்விகளால் வீரர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ள நிர்வாகம் அணியிலுள்ள 7 வயதான வீரர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 2018ஆம் ஆண்டு கோப்பையை வென்ற சிஎஸ்கே, 2019ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் 1 ரன்னில் தோல்வி அடைந்ததால் 2020 ஐபிஎல் தொடருக்கு முன்பிருந்தே சிஎஸ்கே அணி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்துவந்தது. அத்துடன் தோனி ஓராண்டு கிரிக்கெட் ஆடாமல் இருந்து, ஓய்வு அறிவித்த பின் ஆடும் முதல் கிரிக்கெட் தொடர் என்பதால் அவர்மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

IPL2021 CSK Management May Drop 7 Old Players In Dhoni Lead Team

ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய சிஎஸ்கே அதன் பின் அணித் தேர்வில் குழப்பம், பார்ம் அவுட் ஆன வீரர்கள், சமநிலை இல்லாத அணி என மோசமாக சொதப்பி வருகிறது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7 தோல்விகளை பெற்றுள்ள சிஎஸ்கே 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை அனைத்து சீசனிலும் பிளே ஆஃப் சென்ற அந்த அணி இந்த ஆண்டு அதையே இழக்கும் நிலையில் உள்ளது. இன்னும் ஒரு தோல்வி கிடைத்தாலும் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோகும் என்ற சூழலில், அடுத்த 4 போட்டிகளிலும் வென்றாலும் கூட மற்ற அணிகளை விட நெட் ரன் ரேட் கூடுதலாக பெற்று இருக்க வேண்டிய நிலையில் அந்த அணி உள்ளது.

IPL2021 CSK Management May Drop 7 Old Players In Dhoni Lead Team

சிஎஸ்கே அணியின் இந்த நிலையால் கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளெம்மிங் மற்றும் மோசமாக ஆடி வரும் வீரர்கள் என அனைவர் மீது நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் 2021 ஐபிஎல் தொடருக்கு முன் சிஎஸ்கே அணியிலுள்ள கேதர் ஜாதவ், ஷேன் வாட்சன், பியுஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர், முரளி விஜய் ஆகியோர் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இந்த சீசனில் ஓரளவு ரன் குவிக்கும் பேட்ஸ்மேன்களான பாப் டுபிளெசிஸ், அம்பதி ராயுடு ஆகியோரையும் தக்க வைக்க வேண்டாம் எனவும், முற்றிலும் இளம் வீரர்கள் கொண்ட அணியை தயார் செய்ய வேண்டும் எனவும் சிஎஸ்கே நிர்வாகம் முடிவில்  இருப்பதாக கூறப்படுகிறது.

IPL2021 CSK Management May Drop 7 Old Players In Dhoni Lead Team

மேலே கூறப்பட்ட நீக்கப்பட உள்ள வீரர்கள் பெரும்பாலும் தோனியால் அணியில் தேர்வு செய்யப்பட்டவர்களாக உள்ளதால் அவர் மீதும் நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளதாகவே கூறப்படுகிறது. இதனால் சொதப்பும் வீரர்கள் அனைவரும் நீக்கும் சிஎஸ்கே நிர்வாகம் கேப்டன் தோனியை தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி தற்போதுள்ள பேட்டிங் பார்ம், உடற்தகுதியுடன் 2021 ஐபிஎல் தொடரில் பங்கேற்க விரும்புவாரா? அவரை சிஎஸ்கே நிர்வாகம் தக்க வைக்குமா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

மற்ற செய்திகள்