“மொதல்ல இவங்க ஒழுங்கா இல்லனா தூக்குங்க!”... ஐபிஎல் போட்டிகளில் அடுத்தடுத்து நடக்கும் கடுப்பு சம்பவங்கள்.. கொதிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு 2020 ஐபிஎல், களத்தில் இருக்கும் நடுவர்கள் சரியான முடிவுகளை எடுப்பதுதில்லை என்றும், நிறைய தவறுகளை செய்கிறார்கள் என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

“மொதல்ல இவங்க ஒழுங்கா இல்லனா தூக்குங்க!”... ஐபிஎல் போட்டிகளில் அடுத்தடுத்து நடக்கும் கடுப்பு சம்பவங்கள்.. கொதிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்!

தொடக்கத்தில் பஞ்சாப் - டெல்லி போட்டியில் நடுவர் ஒரு ரன் கொடுக்காமல் போனதால்.. சூப்பர் ஓவர் வரை ஆட்டம் போனது, பஞ்சாப் அணியின் தோல்விக்கு அன்று நடுவரின் முடிவே காரணமாகியது, சிஎஸ்கே அணியில் தோனி முதல் முதலாக பேட்டிங் இறங்கிய போது கொடுக்கப்பட்ட தவறான அவுட், பின் டிஆர்எஸ்சில் மாற்றப்பட்டது தொடங்கி, சாதாரண முடிவு எடுக்கவே நடுவர்கள் திணறுவது வரை அனைத்தும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

மிக சாதாரணமான வைட் பந்திற்கு கூட மூன்றாவது அம்பயரிடம் ஆலோசனை கேட்பது, வைட் கொடுக்க வேண்டிய பந்தை, வைட் இல்லை என்று கூறுவது, கேன் வில்லியம்சனுக்கு உடானா போட்ட நோ பாலை, இல்லை என்று தீர்ப்பு வழங்கியது என நடுவர்களின் பெரும்பாலான முடிவுகள் டிஆர்எஸ்சில் மாற்றப்பட்டன.

இதனிடையே பிரீத்தி ஜிந்தா, ஹர்பஜன், ஆர்ச்சர், சேவாக், ஹர்ஷா போக்லே, யுவ்ராஜ் சிங், ஜிம்மி நீஷம் என்று கிரிக்கெட் துறையை சேர்ந்த பலர் நடுவர்களுக்கு எதிராக பேசி உள்ளனர். அறிவுரை வழங்கி உள்ளனர். சிலர் ஒரே தவறுகளை அடிக்கடி செய்யும் நடுவர்களை நீக்க வேண்டும், அல்லது தடை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

 

மற்ற செய்திகள்