'மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா ரெய்னா!!!?'... 'தொடர் தோல்வியால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்'... 'சிஎஸ்கே CEO பதில்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா திரும்புவது குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் சிறந்த அணிகளில் ஒன்றாக உள்ள தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு எதிராக 2 தோல்விகளை சந்தித்துள்ளது. சென்னை அணியின் தொடர் தோல்விக்கு முழுக்க முழுக்க அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் மட்டுமே காரணமாக அமைந்தது. முக்கியமாக சென்னையின் ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடாத நிலையில், ராயுடு காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். மேலும் அணியில் டூ பிளசிஸ் மட்டுமே அதிரடியாக ஆடி வருகிறார்.
இதையடுத்து சென்னை அணிக்கு தற்போது சுரேஷ் ரெய்னா கண்டிப்பாக தேவை என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கமளித்துள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர், "சுரேஷ் ரெய்னாதான் தொடரில் இருந்து விலகும் முடிவை எடுத்தார். நாங்கள் அவரது முடிவை மதிக்கிறோம். அதனால் அவருடைய வருகை குறித்து தற்போது எதுவும் யோசிக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை அணியின் தோல்வி குறித்து பேசியுள்ள சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன், "விளையாட்டில் வெற்றி, தோல்விகள் இரண்டுமே இருக்கும். நிச்சயம் சென்னை அணி பலம்வாய்ந்த அணியாக திரும்பி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், அம்பத்தி ராயுடு குணமடைந்து தற்போது தயாராக உள்ளார் எனவும், அடுத்த போட்டியில் ராயுடு களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்