அப்டி என்ன ‘திடீர்’ பாசம்?.. மும்பைக்கு ‘சப்போர்ட்’ பண்ணும் ‘சிஎஸ்கே’ ரசிகர்கள்.. இதுதான் காரணமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வெற்றி பெற வேண்டும் என சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அப்டி என்ன ‘திடீர்’ பாசம்?.. மும்பைக்கு ‘சப்போர்ட்’ பண்ணும் ‘சிஎஸ்கே’ ரசிகர்கள்.. இதுதான் காரணமா..?

ஐபிஎல் தொடரின் 32-வது லீக் போட்டி இன்று (16.10.2020) அபு தாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இயார் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை கொல்கத்தா அணி எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 53 ரன்களும், கேப்டன் இயான் மோர்கன் 39 ரன்களும் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

IPL2020: Why CSK fans suddenly support MI against KKR ?

இந்த நிலையில் இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற வேண்டும் என சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சினிமாவில் விஜய், அஜித் ரசிகர்கள் எப்படியோ, அதேபோல் ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்வர்.

IPL2020: Why CSK fans suddenly support MI against KKR ?

இப்படி இருக்கையில் திடீரென இன்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வெற்றி பெற வேண்டும் என சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. ஆனால் மும்பை அணி 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் மும்பை அணி ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு எளிதாகி விட்டது. ஆனால் சென்னை அணியோ இன்னும் 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல முடியும். இதனால் 4-வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் ஒருவேளை தோல்வியடைந்தால் புள்ளிப்பட்டியலில் கீழே இறங்க வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் சென்னை அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு சற்று எளிதாகும் என கூறப்படுகிறது. இதுதான் மும்பை அணியின் மீது சென்னை ரசிகர்கள் வைத்த திடீர் பாசத்துக்கு காரணமாக கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்