ஐபிஎல் அணிகளின் கேப்டன்களுக்கு எவ்வளவு சம்பளம்?.. ‘அதிக சம்பளம் வாங்கும் வீரர் யார்’.. முழுவிவரம் உள்ளே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள் வாங்கும் சம்பள விவரம் குறித்து தெரிவிக்கிறது இந்த தொகுப்பு.

ஐபிஎல் அணிகளின் கேப்டன்களுக்கு எவ்வளவு சம்பளம்?.. ‘அதிக சம்பளம் வாங்கும் வீரர் யார்’.. முழுவிவரம் உள்ளே..!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபில் கிரிக்கெட் போட்டி நாளை(19.09.2020) முதல் நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. 8 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் ஒவ்வொரு அணியின் கேப்டனின் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.

ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தான். அவரது சம்பளம் ரூ.17 கோடி. இதனை அடுத்து 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுகொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவும் உள்ளனர். இவர்களது சம்பளம் ரூ.15 கோடி.

இதனை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ரூ.12 கோடி சம்பளம் வாங்குகின்றனர். அடுத்ததாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரூ.11 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனும், தமிழகத்தை சேர்ந்த வீரருமான தினேஷ் கார்த்திக் ரூ.7.4 கோடியும் வாங்குகின்றனர். அடுத்ததாக இளம்வீரர் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார்.

மற்ற செய்திகள்