‘அவர் ஏன் இன்னும் பூமியில விளையாடிட்டு இருக்காரு’!.. கடும் ‘கோபமாக’ வந்த ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் கேதர் ஜாதவ்வை கடுமையாக விமர்சித்து சுமந்த் சி ராமன் ட்வீட் செய்துள்ளார்.

‘அவர் ஏன் இன்னும் பூமியில விளையாடிட்டு இருக்காரு’!.. கடும் ‘கோபமாக’ வந்த ட்வீட்..!

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று (07.10.2020) அபு தாபி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் ராகுல் திருப்பாதி 81 ரன்களை எடுத்தார்.

IPL2020: Sumanth Raman slams CSK Kedar Jadhav poor batting against KKR

இந்தநிலையில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர் வாட்சன் 50 ரன்களும், அடுத்து வந்த அம்பட்டி ராயுடு 30 ரன்களும் எடுத்தனர். 13-வது ஓவரில் 99 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை சென்னை அணி இழந்திருந்தது. இதனை அடுத்து வந்த கேப்டன் தோனி 11 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

IPL2020: Sumanth Raman slams CSK Kedar Jadhav poor batting against KKR

இதனைத் தொடர்ந்து சாம் குர்ரனும் 17 ரன்களில் அவுட்டாக, 129 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை சென்னை அணி இழந்தது. இதனால் 17 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்னை அணி சென்றது. இந்த சமயத்தில் கேதர் ஜாதவ் மற்றும் ஜடேஜா களமிறங்கினர். இதில் கேதர் ஜாதவ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 12 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன்களை மட்டுமே எடுத்தார்.

IPL2020: Sumanth Raman slams CSK Kedar Jadhav poor batting against KKR

கடைசி ஓவரில் 30 ரன்கள் எடுத்தால்தான் வெற்றி என்ற நிலை இருந்தது. அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஜாதவ் அருகில் அடித்துவிட்டு ரன் ஏதும் எடுக்காமல் நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்த பந்திலும் அவர் ரன் ஏதும் எடுக்காததால் சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. வெற்றி பெற வேண்டிய போட்டியை ஜாதவ் தவறவிட்டுவிட்டார் என ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், வர்ணனையாளருமான சுமந்த் சி ராமன், கேதர் ஜாதவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், ‘கேதர் ஜாதவ் ஒருத்தரே இந்த போட்டியை கிட்டத்தட்ட தோற்க செய்தார். பூமியில் ஏன் அவர் இன்னும் விளையாடுகிறார்?’ என அவர் ட்வீட் செய்துள்ளார். இதேபோல் பலரும் கேதர் ஜாதவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்