"மேட்ச் கையவிட்டு போயிடுச்சுன்னு தான் நினைச்சோம்... ஆனா, அவரு வந்தாரு பாருங்க... ஆட்டத்தையே புரட்டி போட்டுட்டாரு... அவருதான் கேம் சேஞ்சர்!!!"... - உணர்ச்சிவசப்பட்ட 'RCB கேப்டன்' கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் வெற்றிக்கான காரணத்தை கேப்டன் கோலி விளக்கியுள்ளார்.
நேற்று ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி திரில் வெற்றிபெற்றுள்ளது. தொடக்கத்தில் ஹைதராபாத் அணி வெற்றிபெறுவது போல இருந்தாலும், போகப் போக போட்டி பெங்களூர் வசம் சென்றது. முதலில் களமிறங்கிய பெங்களூர் 163 ரன்கள் எடுத்த நிலையில், அதன்பின் இறங்கிய ஹைதராபாத் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையம் இழந்து தோல்வி அடைந்தது.
முதல் போட்டியை வெற்றியோடு தொடங்கியது குறித்து பேசியுள்ள பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, "பெங்களூர் அணிக்கு தொடக்கமே அருமையாக இருந்தது. எங்களுடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. தேவ்தத் மிக சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். ஆரோன் பின்ச் நன்றாக ஆடினார். கடைசி மூன்று ஓவர்களில் ஏபிடி அதிரடியாக ஆடினார். அதனால் எங்களின் ஸ்கோர் உயர்ந்து 160 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க முடிந்தது. இதன்மூலம் எங்களுடைய அணியின் பவுலிங் தரப்புக்கு நெகடிவ் எண்ணங்கள் வராமல் பார்த்துக் கொண்டோம். அது பெரிய அளவில் கை கொடுத்தது.
சிவம் துபே மிக சிறப்பாக பவுலிங் செய்தார். பெங்களூர் அணியின் வெற்றிக்கு சாஹலுடைய ஓவர் பெரிய அளவில் உதவியது. அவர் வந்து வரிசையாக முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். அதிலும் மணீஷ் பாண்டே விக்கெட், ஜானி பிரைஸ்டோ விக்கெட், விஜய் சங்கர் விக்கெட் என வரிசையாக முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார். அவர் களத்திற்கு வந்தார், போட்டியையே மாற்றிவிட்டார். என்னை கேட்டால் இந்த போட்டியின் கேம் செஞ்சர் சாஹல்தான் எனக் கூறுவேன்.
இந்தப் பிட்சில் வேறு எந்த ஸ்பின்னரும் எதையும் பெற முடியாது. ஆனால் மணிக்கட்டு ஸ்பின் சாகசம் புரியும் என்பதை சாஹல் நிரூபித்துள்ளார். அவர் சரியான லைனில் பந்து வீசியது மகிழ்ச்சி அளித்தது. கடந்த வருடம் எங்கள் அணிக்கு மோசமாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது, எங்கள் அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. ஆனாலும் சில மாற்றங்களை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்