SRHvsMI: ‘ஒரு விக்கெட் கூட இல்ல... சிக்ஸரும் பவுண்டரியுமாய் விளாசிய கேப்டனால் த்ரில் வெற்றி!’.. ரோஹித்தும் பொல்லார்டும் இருந்தும் திணறிய டீம்!.. ‘KKR-க்கு சிக்கலா?’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஷார்ஜாவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை, பந்துவீச்சு மூலம் கட்டுப்படுத்தியது. அதனால் மும்பை அணி 20, ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் எடுத்தது.
ரோஹித் சர்மா கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெறாத நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடனான இந்த போட்டியில் அணிக்கு திரும்பினார். இதனால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதில் வென்றால், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்கிற நிலையில் அந்த அணி களமிறங்கியது. ஹைதராபாத் அணி இப்போட்டியில் தோல்வி அடைந்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறும் என்கிற நிலையில், ஹைதராபாத் அணி டாஸ் வென்றதும், பந்துவீச்சை தேர்வு செய்து ஆடியது. மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் தடுமாற கேப்டன் ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
டி காக் 25, இஷான் கிஷன் 33, சூர்யகுமார் யாதவ் 36 ரன்கள் இப்போட்டியில் எடுத்தனர். தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் கீரான் பொல்லார்டு போராடி 25 பந்துகளில் 41 ரன்கள் சேர்க்க, இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியை பொருத்தவரை ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்தது. ஹைதராபாத் அணியின் சந்தீப் சர்மா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜேசன் ஹோல்டர் 2, ஷாபாஸ் நதீம் 2, ரஷித் கான் 1 என விக்கெட்டுகளை வீழ்த்தினர். மிகவும் குறைவாக 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்தார் நதீம்.
இதனை அடுத்து 149 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய ஹைதரபாத் அணி வீரர்களான வார்னர் மற்றும் சஹா இருவரும் மட்டுமே விக்கெட்டுகளுக்கு இடமில்லாமல் நின்று ஆடினர். இதில் வார்னர் 58 பந்துகளில் 85 ரன்களும், சஹா 45 பந்துகளில் 58 ரன்களும் எடுத்தனர்.
வார்னர் 10 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடிக்க, சஹா 7 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்து விளாசி, கடைசி நிமிடத்தில் பரபரப்பாக அணி வெற்றிபெறச் செய்தனர். 17.1 ஓவர்களில் இந்த பார்ட்னர்ஷிப் 151 ரன்கள் எடுத்து இலக்கை தாண்டி அபாரமாக வென்றது. இதனால் கொல்கத்தா அணி முன்னேறுவதற்கான சிக்கல்கள் எழுந்துள்ளன.
மற்ற செய்திகள்