சிஎஸ்கே மேல அப்டி என்ன ‘கோவம்’.. ஏன் சேவாக் ‘அப்டி’ சொன்னாரு..? பரபரப்பை கிளப்பிய அந்த வார்த்தை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் சேவாக் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 13-வது சீசனில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் சென்னை அணி உள்ளது. மும்பை அணியுடனான முதல் போட்டியை தவிர, ராஜஸ்தான், டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது.
ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிரான தோல்விகளை அடுத்து ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு காரணம் தொடர்ந்து சொதப்பி வந்த முரளி விஜய்க்கு பதிலாக அம்பட்டி ராயுடு மற்றும் பிராவோ அணியில் சேர்க்கப்பட்டதுதான். சிஎஸ்கே அணியின் பந்து வீச்சு ஆரம்பத்தில் அபாரமாக இருந்தது. 11 ஓவர்களில் ஹைதராபாத் அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை 69 ரன்களுக்குள் எடுத்தது. ஆனால் அடுத்து வந்த ப்ரியம் கார்க் மற்றும் அபிஷேக் ஷர்மா என்ற இரண்டு இளம்வீரர்கள் சென்னை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் 164 ரன்களை குவித்தது. இது சென்னை அணிக்கு சிக்கலாக மாறியது.
இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக், சென்னை அணியை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், ‘இந்த போட்டி தோனியின் மூளைக்கும், வார்னரின் பலத்துக்கும் இடையே நடந்தது. ஆனால் ஹைதராபாத் அணி வெறும் பலத்தை வைத்து சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. ஹைதராபாத் அணியின் முதல் நான்கு வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியதும், அடுத்து வந்த இரண்டு சின்ன பசங்க என்ன செய்துவிடுவார்கள் என சிஎஸ்கேவின் சீனியர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் அந்த சிறுவர்கள்தான் சிஎஸ்கே அணியை அடித்து வீழ்த்தினார்கள்.
சென்னை அணி கூலான அணுகுமுறைக்கு பெயர் போனது. ஆனால் அவர்கள் தங்களின் திட்டத்தில் தாங்களே மாட்டிக்கொண்டு முட்டாள்களாகி இருக்கிறார்கள். இந்த போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றதா? அல்லது சிஎஸ்கே வலைப்பயிற்சி செய்ததா?’ என சென்னை அணியை கடுமையான விமர்சனம் செய்துள்ளார். சிஎஸ்கே வீரர்களை ‘மூட்டாள்கள்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி சேவாக் விமர்சனம் செய்தது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மற்ற செய்திகள்