‘யாருப்பா நீ..?’.. முடிஞ்சதுனு நெனக்கும்போது மின்னல் மாதிரி வந்த ‘19 வயது’ வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

‘யாருப்பா நீ..?’.. முடிஞ்சதுனு நெனக்கும்போது மின்னல் மாதிரி வந்த ‘19 வயது’ வீரர்..!

இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வார்னர் மற்றுன் பேர்ஸ்டோ தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் தீபக் சஹர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த மனிஷ் பாண்டே  29 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனை அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன், வார்னருடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் வார்னர் 28 ரன்களில் அவுட்டாக, அடுத்து கேன் வில்லியம்சன்னும் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார்.

IPL2020: Priyam Garg shows his class during against CSK

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த பிரியம் கார்க், அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடத்தொடங்கினர். இரு இளைஞர்களும் சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதில் தீபக் சாஹர் வீசிய ஓவரில் இரண்டு கேட்ச்களை சென்னை வீரர்கள் தவறவிட்டனர். இதனால் இந்த ஜோடி 43 பந்துகளுக்கு 77 ரன்களை எடுத்து சர்வில் இருந்த ஹைதராபாத் அணியை மீட்டது. இதில் அபிஷேக் ஷர்மா 31 ரன்களில் அவுட்டாக, மறுபுறம் 19 வயதான பிரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்கள் அடித்து அசத்தினார். இதனால் 20 ஓவர்களின் முடிவில் 164 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது. முன்னணி வீரர்கள் எல்லாம் அவுட்டாகியும், இந்த இரு இளம்வீரர்களின் அதிரடி ஆட்டம் ஹைதராபாத் அணிக்கு நல்ல திருப்பு முனையாக அமைந்தது.

இந்த நிலையில் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.

மற்ற செய்திகள்