யார் சார் இவங்க..? நீளமான முடி, ‘துறுதுறு’ நடவடிக்கை.. ரசிகர்களை ‘கன்ஃப்யூஸ்’ பண்ணிய அம்பயர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹைதராபாத்-கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் நீளமான முடியுடன் வந்த அம்பயரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

யார் சார் இவங்க..? நீளமான முடி, ‘துறுதுறு’ நடவடிக்கை.. ரசிகர்களை ‘கன்ஃப்யூஸ்’ பண்ணிய அம்பயர்..!

ஐபிஎல் தொடரின் 35-வது லீக் போட்டி நேற்று (19.10.2020) அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்தது.

IPL2020: Netizens confuses Pashchim Pathak to be a woman umpire

இதனை அடுத்து 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி விளையாடியது. ஆனால் 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணியும் 163 ரன்களையே எடுத்தது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இப்போட்டியில் நீளமான முடியுடன் வந்த அம்பயர் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

IPL2020: Netizens confuses Pashchim Pathak to be a woman umpire

மும்பையை சேர்ந்த பாஷிம் பதக் உள்ளூர் போட்டிகளில் அம்பயராக செயல்பட்டுள்ளார். அப்போதே போட்டியின் போது ஹெல்மெட் அணிந்து அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். அம்பயர்களுக்கு போட்டிகளின் போது காயம் ஏற்பாடமல் தடுப்பதற்காவே ஹெல்மெட் அணிந்து வந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

IPL2020: Netizens confuses Pashchim Pathak to be a woman umpire

தற்போது அவருக்கு ஐபிஎல் 2020 தொடரில் அம்பயராக செயல்பட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய கொல்கத்தா-ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இவர் அம்பயராக செயல்பட்டார். நீளமான முடியும், வித்தியாசமான நடவடிக்கையும் பார்த்த நெட்டிசன்கள் இவரை பெண் அம்பயர் என்று நினைக்க தொடங்கினர். ஆனால் உண்மையில் இவர் ஆண் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் முடியை பார்த்த பலரும் ‘மைக்கில் ஜாக்சன்’ என்றும் ‘ஸ்டைலிஸ் அம்பயர்’ என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்