“யாரையும் குச்சி வெச்சு.. மிரட்டி..!” - ஐபிஎல் சாம்பியன் அணி கேப்டன் ரோஹித் சொன்னது என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக இறுதிக்குத் தகுதி பெற்றதுடன் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது.

“யாரையும் குச்சி வெச்சு.. மிரட்டி..!” - ஐபிஎல் சாம்பியன் அணி கேப்டன் ரோஹித் சொன்னது என்ன?

இதனையடுத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு ரோஹித் சர்மா கூறும்போது, “ஒட்டுமொத்த தொடரிலும் வீரர்கள் திருப்தியாக ஆடினர்.  முதல் பந்திலிருந்தே நாங்கள் குறிக்கோளுடன் இருந்தோம். என்ன தவறு செய்கிறோம், என்ன முன்னேற்றம் தேவை என்பதை அவ்வப்போது ஆராய்ந்தோம்.

ஒரு அணியின் கேப்டனாக அமைதியுடன் இருக்க வேண்டும். யாரையும் குச்சி வைத்து மிரட்டி வேலை வாங்கும் கேப்டன் நான் அல்ல. சுழற்சி முறையில் ஹர்திக், குருணால், பொலார்டின் பங்குகளை பயன்படுத்தினோம். பவுலிங்கிலும் அப்படித்தான் உத்திக்காக ஜெயந்த் யாதவ் தேவைப்பட்டார்.

இஷான் கிஷன், சூரிய குமார் யாதவ் அற்புதமாக ஆடினார்கள்.  என் விக்கெட்டை நான் அவருக்காக தியாகம் செய்திருக்க வேண்டும். நம்ப முடியாத ஷாட்களை சூரியா ஆடினார்.  இருவரையும் நாம் ஊக்குவித்ததன் விளைவுதான் அவர்களின் ஆட்டம். வான்கடேயில் ஆடாததை, இழந்தது போல் உணர்கிறேன்” என்று ரோஹித் சர்மா கூறினார்.

மற்ற செய்திகள்