'எனக்கு ஏன் அந்த சான்ஸ் குடுக்கல?'... 'மூணே வார்த்தையில'... 'தல தோனி சொன்ன பதிலால்'... 'வாயடைத்து நின்ற சிஎஸ்கே வீரர்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெத் ஓவர் குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் தீபக் சாகர் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் வைரலாகியுள்ளது.
2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கண்டுபிடிப்பான தீபக் சாஹர் புனே அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது, தோனிதான் சென்னையில் அணியில் எடுத்து அவரை விளையாட வைத்தார். இதையடுத்து சிஎஸ்கே அணியில் இணைந்த அவர் அணியின் முன்னணி பவுலராக மாறினார். அதன் பின்னர் இந்திய அணியிலும் தீபக் சாகருக்கு வாய்ப்பு கிடைக்க, அணியின் எதிர்காலத்தில் இவரும் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
குறிப்பாக சென்னை அணிக்காக முதல் 10 ஓவர்களில் எப்போதும் தனது 4 ஓவர்களை தீபக் சாஹர் போடக் கூடியவர். ஆனால் இவர் 140 கிமீ வேகத்தில் பந்து வீசும்போதும் கூட இவருக்கு எப்போதும் தோனி கடைசி 5 டெத் ஓவர்களில் வாய்ப்பு கொடுத்தது இல்லை. டெத் ஓவர்களில் பெரும்பாலும் பிராவோ போன்ற வீரர்களே பந்து வீசி இருக்கிறார்கள். இந்நிலையில் தனக்கு டெத் ஓவர்களில் வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்பது குறித்து தோனியிடம் சாஹர் கேட்டுள்ளார்.
அப்போது சாஹர் இப்படி வந்து கேட்பார் என நினைக்காத தோனி உடனே அவரிடம், "நான் வீரர்களை வளர்த்து விடுகிறேன்" என பதில் சொல்லி கூறியுள்ளார். "I groom youngsters" என மூன்றே வார்த்தையில் தோனி சொன்ன பதிலைக் கேட்ட சாஹர், அதிலிருந்து தோனி என்ன செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்