‘டெத்’ ஓவர்ல முதல் பாலே இப்டியா.. பல திட்டம் போட்ட ‘தல’.. ஆனா கடைசி வரை ‘அவர’ அவுட் பண்ண முடியல..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் 25-வது லீக் போட்டி இன்று (10.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது.

‘டெத்’ ஓவர்ல முதல் பாலே இப்டியா.. பல திட்டம் போட்ட ‘தல’.. ஆனா கடைசி வரை ‘அவர’ அவுட் பண்ண முடியல..!

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். இதில் ஆரோன் ஃபிஞ்ச் 2 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.

IPL2020: MS Dhoni discuss with Bravo after Virat Kohli smash four

இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி, தேவ்தத் படிக்கலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதில் படிக்கல் 33 ரன்னில் அவுட்டாகினார். ஆனால் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 90 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது.

IPL2020: MS Dhoni discuss with Bravo after Virat Kohli smash four

இப்போட்டியில் விராட் கோலியை அவுட் செய்ய, பந்துவீச்சில் பல சோதனைகளை தோனி முயற்சித்து பார்த்தார். ஆனாலும் கோலி தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். இந்தநிலையில் கடைசி ஓவரை பிராவோ வீசினார். ஆனால் அந்த ஓவரின் முதல் பந்தை விராட் கோலி பவுண்டரிக்கு விளாசினார். இதனால் உடனே தோனி வந்து பிராவோவிடம் ஆலோசனை கூறிவிட்டு சென்றார். இதனை அடுத்து தொடர்ந்து நான்கு பந்துகளில் விராட் கோலி 2 ரன்கள் ஓடினார். மூன்றாவது வீரராக களமிறங்கி கடைசி ஓவரிலும் தொடர்ந்து நான்கு பந்துகளில் 2 ரன்கள் ஓடியது அவரது ஃபிட்னஸை காட்டுகிறது என விராட் கோலியின் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்