அவர வெளிய உட்கார வச்சிட்டு ‘இவர’ எடுக்க என்ன காரணமா இருக்கும்..? ராகுல் ப்ளான் எடுபடுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று அபு தாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
மும்பை அணியை பொருத்தவரை அணியில் எந்த மாற்றமும் இல்லை. பஞ்சாப் அணியில் முருகன் அஸ்வின் நீக்கப்பட்டு கிருஷ்ணப்பா கௌதம் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் முருகன் அஸ்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மும்பை அணியில் அதிரடி பேட்ஸ்மேன் பொல்லார்ட்டை சமாளிக்க ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதமை அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் தோல்வியை தழுவியது. அதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற பஞ்சாப் அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று மும்பை அணி தோல்வியை தழுவியதால் அந்த அணியும் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது.
இந்த நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்கினர். இதில் காட்ரெல் வீசிய முதல் ஓவரிலேயே டி காக் டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ரன் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
One change in there for #KXIP. Gowtham in for M Ashwin.#MumbaiIndians remain unchanged.#Dream11IPL #KXIPvMI pic.twitter.com/v1ng6QGXAJ
— IndianPremierLeague (@IPL) October 1, 2020
அடுத்தடுத்து இரண்டு வீரர்கள் அவுட்டானதால் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
மற்ற செய்திகள்