"அவங்க ரெண்டு பேர் கூட... இவர கம்பேர் பண்ணாதீங்க... வேற டீமா இருந்திருந்தா இந்நேரம்"... 'வெளுத்து வாங்கிய கம்பீர்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் வரை முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தகுதி சுற்று போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.

"அவங்க ரெண்டு பேர் கூட... இவர கம்பேர் பண்ணாதீங்க... வேற டீமா இருந்திருந்தா இந்நேரம்"... 'வெளுத்து வாங்கிய கம்பீர்!!!'...

கடந்த மூன்று சீசன்களில் ஆர்சிபி அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாத நிலையில் இந்த சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வியால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த ஆர்சிபி அணி இந்த சீசனை விட்டே வெளியேறியுள்ளது. பெங்களூர் அணி சிறந்த வீரர்களைக் கொண்ட அணியாக இருந்தும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பை யைவெல்லவில்லை. விராட் கோலி கடந்த 8 ஆண்டுகளாக கேப்டனாக இருந்தும் அந்த அணியால் சிறப்பாக செயல்பட முடியாமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருக்கிறது.

IPL2020 Gambhir Wants RCB To Take Away Captaincy From Virat Kohli

இந்நிலையில் நடப்பு தொடரின் ஆரம்பத்தில் வெற்றிகளை குவித்த ஆர்சிபி மீது எதிர்பார்ப்பும் அதிகரித்து வந்தது. கடைசியாக லீக் சுற்றின் இறுதி நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வி அடைந்தபோதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நெட் ரன் ரேட் குறைவாக இருந்ததால் நூலிழையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மோசமாக சொதப்பி தொடரை விட்டு வெளியேறியுள்ளது. இந்நிலையில் 8 ஆண்டுகள் கேப்டனாக இருந்தும் அணிக்கு ஒரு முறை கூட கோப்பை வென்று தராத விராட் கோலி தாமாகவே பொறுப்பை ஏற்றுக் கொண்டு கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார் .

IPL2020 Gambhir Wants RCB To Take Away Captaincy From Virat Kohli

இதுபற்றி பேசியுள்ள அவர், "வேறு அணிகளில் இப்படி 8 ஆண்டுகளாக ஒரு வீரர் கோப்பை வெல்லாத நிலையில் நீடிக்க முடியமா? அப்படி இருக்கும் போது கேப்டன் பொறுப்பில் ஒருவர் எப்படி எட்டு ஆண்டுகள் கோப்பை வெல்லாமல் இருக்க முடியும்?  கோலி தாமாக முன்வந்து தோல்விக்கு பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். தோனி, ரோஹித் சர்மா நீண்டகாலமாக சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகத் தொடர்கிறார்களே என்று கேட்கலாம். ஆனால் ரோஹித், தோனியுடன் கோலியை ஒப்பிடாதீர்கள். தோனி 3 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ரோகித் நான்கு முறை வென்று கொடுத்துள்ளார். அதனால்தான் அவர்கள் நீண்ட காலம் கேப்டனாக தொடர்கின்றனர்.

IPL2020 Gambhir Wants RCB To Take Away Captaincy From Virat Kohli

ரோகித் ஷர்மாவும் கோப்பையை இத்தனையாண்டு காலம் வென்று கொடுக்காமல் இருந்திருந்தால், அவரும் நீக்கப்பட்டிருப்பார். ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு வகையிலான அளவுகோல் இருக்கக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார். மேலும் முன்னதாக இந்த சீசனில் பெங்களூர் அணி நான்கு தோல்விகளுக்கு பின்னும் பிளே-ஆஃப் செல்லத் தகுதியான அணி என விராட் கோலி கூறிஇருந்த நிலையில், அதை மறுத்துள்ள கம்பீர் பெங்களூர் அணி பிளே-ஆஃப் செல்லக் கூடத் தகுதி பெறவில்லை எனவும், அவர்கள் ஆடியது மோசமாக இருந்ததெனவும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்