வெற்றிக்கு அவங்க ‘ரெண்டு’ பேர்தான் காரணம் .. சிஎஸ்கேவோட மிகப்பெரிய பலமே இந்த ‘விஷயம்’ தான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான வெற்றி குறித்து சிஎஸ்கே வீரர் டு ப்ளிஸிஸ் தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கு அவங்க ‘ரெண்டு’ பேர்தான் காரணம் .. சிஎஸ்கேவோட மிகப்பெரிய பலமே இந்த ‘விஷயம்’ தான்..!

ஐபிஎல் தொடரில் 18 வது லீக் போட்டி நேற்று (04.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை பஞ்சாப் அணி குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 63 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 33 ரன்களை எடுத்தனர்.

IPL2020: Faf du Plessis talks about MS Dhoni and Stephen Fleming

அதன் பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவரில் 181 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் வாட்சன் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 83 ரன்களும், டு ப்ளிஸிஸ் 53 பந்துகளில் 87 ரன்களில் குவித்தனர். தொடர்ந்து 3 தோல்விகளுக்கு பின் பெற்ற இந்த வெற்றி சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

IPL2020: Faf du Plessis talks about MS Dhoni and Stephen Fleming

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சிஎஸ்கே அணியின் வீரர் டு ப்ளிஸிஸ், ‘இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளோம். நான் இந்த போட்டியில் இறுதி வரை விளையாட நினைத்தேன். 30 ரன்கள் 40 ரன்களில் அவுட் ஆகி வெளியேற கூடாது என நினைத்தேன். வாட்சனுடன் அமைத்த பார்ட்னர்ஷிப் சிறப்பானது. அவர் ஒரு அருமையான பேட்ஸ்மேன். எங்கள் அணியில் உள்ள மிகப்பெரிய வீரர் இவர்தான்.

IPL2020: Faf du Plessis talks about MS Dhoni and Stephen Fleming

கடந்த போட்டியில் நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. இன்று வாட்சன் எங்கள் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தார். 3-4 கேம்கள் போனதும் அணி நல்ல பார்மிற்கு வருவோம் என்று நினைத்தோம். அந்த வகையில் தற்போதுதான் அணி வீரர்கள் பார்மிற்கு திரும்பியுள்ளோம். இந்த பெருமையெல்லாம் தோனி மற்றும் பிளமிங் ஆகிய இருவரையே சேரும்.

IPL2020: Faf du Plessis talks about MS Dhoni and Stephen Fleming

ஏனென்றால் தோல்விகளால் அணியை மாற்றாமல் எப்போதும் எங்களது வீரர்களை ஆதரித்து வருகிறார்கள். ஒரு சில போட்டிகளில் ஏற்படும் தோல்விகளால் அணியை மாற்றாமல் இருப்பதே சென்னை அணியின் மிகப்பெரிய பலம். மேலும் அணி நிர்வாகமும் எங்களது அனுபவத்தை நம்புகிறது. அதனால் எந்த ஒரு வீரரும் அணியில் இருந்து நீக்குவது கிடையாது. எங்களது கேப்டன் மற்றும் கோச் ஆகியோரே இந்த வெற்றிக்கு காரணம் என நாங்கள் நினைக்கிறோம்’ என்று டு ப்ளிஸிஸ் கூறினார்.

மற்ற செய்திகள்