"ஐயோ, அவரு நல்ல கேப்டன் ஆச்சே!!!... இல்ல, இல்ல... இப்படியே போனா பாதிலயே... இந்த கேப்டன தூக்கறது கன்பார்ம்"... - 'ஆரம்பிச்ச 2 நாள்லயே'... 'பரபரப்பை கிளப்பியுள்ள பிரபல வீரர்!!!'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த சீசனின் பாதியிலேயே ஒரு அணியின் கேப்டன்சி கை மாற வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் கடந்த 19ஆம் தேதி தொடங்கி மைதானத்தில் ரசிகர்கள் இல்லாதபோதும் பரபரப்புக்கு குறைவில்லாமல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கேவிற்கு அடுத்ததாக வெற்றிகரமாக கேகேஆர் அணி 2012 மற்றும் 2014 ஆகிய 2 சீசன்களிலும் கோப்பையை வென்றுள்ளது. கேகேஆர் அணிக்காக இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் கம்பீர் 2017 சீசனுடன் அணியிலிருந்து விலகினார்.
இதையடுத்து 2018 சீசனில் கேகேஆர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் தான் இப்போதுவரை அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். முன்னதாக தினேஷ் கார்த்திக் தலைமையில் 2018ஆம் ஆண்டு பிளே ஆஃபிற்கு சென்ற கேகேஆர் அணி, கடந்த சீசனில் பிளே ஆஃபிற்கே தகுதிபெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது. இதனால் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சி, களவியூகம், திட்டமிடல் ஆகியவை சர்ச்சைக்குள்ளான நிலையில், இந்த சீசனிலும் தினேஷ் கார்த்திக் தான் கேப்டனாக செயல்படவுள்ளார்.
கடந்த 2 சீசன்களிலும் தினேஷ் கார்த்திக்கிற்கு களத்தில் வியூக ரீதியாக உதவுதற்கு சரியான வீரர் இல்லாமல் இருந்த நிலையில், இங்கிலாந்து உலக கோப்பை வின்னிங் கேப்டன் இயன் மோர்கன் இந்த சீசனில் கேகேஆர் அணியில் உள்ளார். எனவே அவர் கேப்டன்சியில் தினேஷ் கார்த்திக்கிற்கு உதவிகரமாக இருப்பார் என்பதால் அந்த அணி மேலும் வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த சீசனின் இடையிலேயே இயன் மோர்கனே கேப்டன்சி பொறுப்பை ஏற்கக்கூடிய நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், "டாப் ஆர்டர் பேட்டிங்கிற்கு வலு சேர்ப்பதுடன் இயன் மோர்கனின் கேப்டன்சி திறனும் கேகேஆர் அணிக்கு மிகவும் உதவிகரமாகவும் வலு சேர்ப்பதாகவும் அமையும். கேகேஆர் அணி தொடக்க போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லையென்றால், சீசனின் பாதியிலேயே மோர்கன் அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" எனத் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்