Video: தெரியாம ‘இடிச்ச’ மாதிரி தெரியலயே.. கடைசி ஓவரை பரபரப்பாக்கிய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை தழுவியது.
ஐபிஎல் தொடரின் 30-வது லீக் போட்டி இன்று (15.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை டெல்லி கேபிடல்ஸ் எடுத்தது. அதிகபட்சமாக தவான் 57 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 41 ரன்கள் அடித்தார்.
இந்தநிலையில் இப்போட்டியின் கடைசி 3 பந்துகளில் 19 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் அணி இருந்தது. அப்போது பேட்டிங் ஸ்ட்ரைக்கில் நின்ற ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ராகுல் திவேட்டியா, துஷர் தேஷ்பண்டே வீசிய பந்தை சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால் பந்து கேட்ச்-க்கு சென்றது. இதனை துஷர் தேஷ்பாண்டே கேட்ச் பிடிக்க முயன்றார். அப்போது ராகுல் திவேட்டியா ரன் எடுக்க ஓடும்போது துஷரின் மோதினார். இதனால் கேட்ச் தவறவிடப்பட்டது. இதனை அடுத்து இந்த சம்பவத்தை ரீப்ளேவில் பார்க்கப்பட்டதுபோது ராகுல் திவேட்டியா வேண்டுமென்றே துஷரை பேட்டால் இடித்தது போல் தெரிந்தது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்