“CSK வெற்றி!”.. “இது ஸ்பார்க் இல்ல.. அதுக்கும் மேல”.. “இந்த பையன நியாபகம் வெச்சுக்கங்க.. அணியின் எதிர்காலத்துக்கு இவர் இருக்கார்!” - விளாசல் வீரருக்கு ‘பறக்கும்’ பாராட்டுகள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் டி20 போட்டித் தொடரின் 49வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சையில் ஈடுபட்டன.

“CSK வெற்றி!”.. “இது ஸ்பார்க் இல்ல.. அதுக்கும் மேல”.. “இந்த பையன நியாபகம் வெச்சுக்கங்க.. அணியின் எதிர்காலத்துக்கு இவர் இருக்கார்!” - விளாசல் வீரருக்கு ‘பறக்கும்’ பாராட்டுகள்!

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று, சிறப்பாக துவங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்தடுத்த போட்டிகளில் மோசமாக விளையாடி முதல் அணியாகவும், முதல் முறையாகவும் ப்ளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், ப்ளே ஆஃபில் இருந்து வெளியேறிய பின்னரான, 49வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று மோதிக்கொண்டன. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பின்னர் 173 என்கிற இலக்கை துரத்தும் நோக்கில் களமிறங்கிய சென்னை அணியில் ஆடிய காயிக்வாடு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். 53 பந்துகளுக்கு 72 ரன்களை அதிரடியாக ஆடிய காய்க்வாடு 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் 20 ஓவர்களின் முடிவில் 178 ரன்களை எடுத்து சென்னை அணி வென்றது.

“இப்படி அசுரத் தனமாக ஆடிய காயிக்வாடு ஒருவர் இருக்கிறார் சிஎஸ்கேவின் எதிர்காலத்துக்காக”,

“இது ஸ்பார்க் இல்ல.. அதுக்கும் மேல” என்றெல்லாம் காயிக்வாடை பாராட்டி ரசிகர்களின் ட்வீட்டுகள் பறக்கின்றன.

இதேபோல் கிரிக்கெட் பிரபலம் ஸ்ரீகாந்த் தனது ட்வீட்டில், காயிக்வாடின் பெயரை குறிப்பிட்டு,  “இவரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், விக்கெட்டுகளுக்கு மத்தியில், அத்தனை ஷாட்களையும் அருமையாக விளாசுகிறார். க்ளாஸ் என்றால் இவர்தான்” என புகழாரம் சூட்டியுள்ளார்.

 

மற்ற செய்திகள்