இத்தன நாளா எதிர்பார்த்த ‘அந்த’ வாய்ப்பு.. இன்னைக்கு தான் ‘கெடச்சிருக்கு’!.. தோனி சொன்ன ‘அதிரடி’ பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13-வது சீசன் ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டி இன்று (13.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெரும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணியின் இம்ரான் தாகீர் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. அதேபோல் தமிழக வீரர் ஜெகதீசனுக்கு பதிலாக ப்யூஸ் சாவ்லா மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
இந்தநிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்பின்னர் பேசிய தோனி, ‘நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். ஆம், ஒரு மாற்றத்திற்காக கடந்த சில ஆட்டங்களில் நாங்கள் முதலில் பேட் செய்ய விரும்பினோம். ஆனால் ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் சொன்னது போல், ஒவ்வொரு விளையாட்டுக்கும் புதிய சிக்கல்கள் இருக்கும். இன்று அது ஒரு பக்கத்தின் குறுகிய எல்லையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியதாக இருக்கும். கிரிக்கெட் வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமானது. அது எப்போதும் நீங்கள் விரும்பும் வழியில் செல்லாது. ஒரு செயல்முறையாக நீங்கள் பின்பற்ற விரும்புவதை இது உங்களுக்கு கற்பிக்கிறது. 2010 ஒரு மகிழ்ச்சியாக முடிந்தது. ஆனால் இந்த சீசனை அதோடு தொடர்புபடுத்த முடியாது’ என தோனி தெரிவித்தார்.
#CSK wins the toss and they will bat first against #SRH.#SRHvCSK #Dream11IPL pic.twitter.com/btTuiqftUJ
— IndianPremierLeague (@IPL) October 13, 2020
கடந்த 2010 ஐபிஎல் தொடரில் இதேபோல் முதல் பாதியில் சென்னை அணி 7 போட்டியில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதன்பின்னர் சிறப்பாக விளையாடி சிஎஸ்கே கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்