இத நாங்க ‘எதிர்பாக்கவே’ இல்லையே.. சென்னை அணியில் ‘அதிரடி’ மாற்றம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13-வது சீசன் ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டி இன்று (13.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெரும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்க சென்னை அணியின் இம்ரான் தாகீர் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. அதேபோல் தமிழக வீரர் ஜெகதீசனுக்கு பதிலாக ப்யூஸ் சாவ்லா மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
இந்தநிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் குர்ரன் மற்றும் டு பிளசிஸ் களமிறங்கியுள்ளனர். முதலில் முரளி விஜய் மற்றும் டு பிளிசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஆனால் முரளி விஜய் சொதப்பியதால் அவருக்கு பதிலாக வாட்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினர். சென்னை அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தாலும் மிடில் ஆர்டர் சொதப்பி வருவதாக கேப்டன் தோனி தெரிவித்திருந்தார்.
Kadai Kutty opening tonight! #NeengalKettavai 🦁💛#WhistlePodu #WhistleFromHome #Yellove #SRHvCSK pic.twitter.com/qqTGKIzCP9
— Chennai Super Kings (@ChennaiIPL) October 13, 2020
இந்தநிலையில் இளம்வீரர் சாம் குர்ரன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியிருப்பது சென்னை அணியின் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்