Watch: மறுபடியும் ‘மான்கட்டா’?.. அஸ்வின் செஞ்சதை பார்த்து ‘சிரிச்ச’ கோச்.. என்ன நடந்தது?.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி வீரர் அஸ்வின் மான்கட் செய்வதுபோல சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா 42 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 53 ரன்களும் மற்றும் ரிஷப் பந்த் 37 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது.
இந்த நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3-வது ஓவரை டெல்லி அணி வீரர் அஸ்வின் வீசினார். அப்போது ஓவரின் 3-வது பந்தை அஸ்வின் வீச முயன்றபோது பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஃபிஞ்ச் க்ஸீஸை தாண்டி சென்றார். இதனால் அஸ்வின் மான்கட் அவுட் செய்வதுபோல நின்று வார்னிங் கொடுத்தார். இதனைப் பார்த்த டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் சிறிதாக புன்னகை செய்தார். முன்னாதாக நடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பட்லரை மான்கட் முறையில் அஸ்வின் அவுட் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் மீண்டும் அஸ்வின் மான்கட் செய்வதுபோல் நின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Mr. Popular ,I'm swag your bowling then wicket with my jump let moves like Ashwin style .Healthy bowling by #ashwin @ashwinravi99 pic.twitter.com/fcBape4cF7
— 🇲🇾🇲🇾Jaya@Gayathiri Ka 🇲🇾🇲🇾 (@SheraryGayathir) October 5, 2020
Ricky Ponting was smiling after Ravi Ashwin gave a warning to Aaron Finch for Mankading. pic.twitter.com/aCiG3pjPKH
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 5, 2020
Why Ashwin, why! :( pic.twitter.com/XOoGptalPa
— Vinayakk (@vinayakkm) October 5, 2020
Ashwin 🤣
RCB - 18/0 (2.3)#RCBvDC #Dream11IPL #IPL2020 #YehHaiNayiDilli
— Delhi Capitals (Tweeting from 🇦🇪) (@DelhiCapitals) October 5, 2020
Every action has an equal and opposite reaction. 🤷♂️
Thank you Newton, Ponting and Ashwin!#RCBvsDC #RCBvDC #IPL2020 pic.twitter.com/CrlVNkGqOn
— Nikhil 🏏 (@CricCrazyNIKS) October 5, 2020
மற்ற செய்திகள்