"இரண்டாவது மேட்ச்சுல தோத்ததுக்கு... அவரு இல்லாததும் ஒரு காரணமா???" - CSK-வுக்கு வந்துள்ள புதிய சிக்கல்... எப்படி சமாளிக்கப்போகிறார், தோனி???

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை அணியில் அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இரண்டாவது மேட்ச்சுல தோத்ததுக்கு... அவரு இல்லாததும் ஒரு காரணமா???" - CSK-வுக்கு வந்துள்ள புதிய சிக்கல்... எப்படி சமாளிக்கப்போகிறார், தோனி???

ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணியில் பல திருப்பங்கள் நடந்து வருகிறது. முன்னதாக போட்டிகள் தொடங்கும் முன்பே சென்னை அணியில் இருந்து ரெய்னா வெளியேறினார். தனிப்பட்ட காரணங்களால் அவர் விலகியதாக கூறப்பட்ட நிலையில், ரெய்னாவைத் தொடர்ந்து ஹர்பஜன் அணியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து தான் சென்னை அணி மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் அணியில் உள்ள வீரர்களை வைத்து வெற்றி பெற்றது. ரெய்னா இல்லாதபோதும், அம்பதி ராயுடு, டு பிளசிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

IPL2020 Ambati Rayudu Will Miss One More Game At Worst CSK CEO

ஆனால் அதற்கு அடுத்து சென்னை அணி ராஜஸ்தானுக்கு எதிராக விளையாடிய போட்டியில் காயம் காரணமாக ராயுடு விளையாடாத நிலையில், அந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கே சிஇஓ, "அம்பதி ராயுடு காயம் காரணமாக அடுத்து ஒரு போட்டியில் விளையாடாமல் போகலாம். அவர் இன்னும் முழுமையான உடல் தகுதியை பெறவில்லை. அதனால் இவர் அடுத்த போட்டியிலும் ஆட வாய்ப்பில்லை. அதே நேரம் ஒருவேளை அவர் அடுத்த போட்டிக்குள் குணமடைந்தால் விளையாடலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

IPL2020 Ambati Rayudu Will Miss One More Game At Worst CSK CEO

சென்னை அணியின் முன்னணி வீரர் அம்பதி ராயுடு அடுத்த போட்டியிலும் விளையாட வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளதால், அவருடைய  இடத்தில் யார் விளையாடுவார் என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது. ராயுடுவிற்கு மாற்றாக வந்த ரூத்துராஜ் சரியாக ஆடாததால் அவர் அணியில் நீடிப்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. அவருக்கு பதில் புதிய வீரர் களமிறங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முதலிலேயே ரெய்னா, ஹர்பஜன் அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், அணியில் நல்ல பார்மில் இருந்த ராயுடுவும் காயம் காரணம் ஓய்வு எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்