இந்த ஒரு ‘சம்பவம்’ போதும்.. ‘வேர்ல்டு கிளாஸ்’ ப்ளேயர்னு நிரூபிக்க.. புகழ்ந்து தள்ளிய ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 28-வது லீக் போட்டி இன்று (12.10.2020) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 73 ரன்கள் அடித்து அசத்தினார்.
Good captaincy by #ViratKohli as #rcb wins against #KKR
By 82 runs
What a shot by #ABDevilliers 🔥🔥🔥 must watch #ipl
Completely destroyed #AmiKKR and took revenge from the #KKRHaiTaiyaar bowlers . #Russell #tripathi #RCBvsKKR #Uae #IPLinUAE #IPL2020 #Video #Trending pic.twitter.com/z0S4JybJj3
— adikantweets (@AadityaKanchan) October 12, 2020
இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் பெங்களூரு அணி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தை தாண்டி சாலையில் விழுந்தது. முன்னதாக சென்னை அணியின் கேப்டன் தோனி அடித்த சிக்ஸர் ஒன்றும் இதேபோல் சாலையில் விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்