ஆத்தாடி 'இம்புட்டு' கோடி நட்டமா?... ஆனாலும் 'எஸ்' சொல்ல மாட்டோம்... 'பிரபல' அணி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகள் நடைபெறாவிட்டால்  4000 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டமாகும் என பிசிசிஐ தெரிவித்து உள்ளது. கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு நடப்பது? கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கிடையில் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என ராஜஸ்தான் அணி கருத்து தெரிவித்திருக்கிறது.

ஆத்தாடி 'இம்புட்டு' கோடி நட்டமா?... ஆனாலும் 'எஸ்' சொல்ல மாட்டோம்... 'பிரபல' அணி அறிவிப்பு!

இந்த நிலையில் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் நடத்தப்பட்டால் நாங்கள் நோ சொல்லுவோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை பார்க்க இயலாது. இது மற்றொரு சையத் முஷ்டாக் அலி டிராபி (உள்ளூர் டி20 தொடர்) போன்றுதான் இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மோசமான சூழ்நிலைக்குப் பிறகு அணிகள் பிசிசிஐ-யை தொடர்பு கொள்ளவில்லை. இந்த வருடத்தின் இறுதியில் ஐபிஎல் தொடர் நடக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது,'' என தெரிவித்து இருக்கிறது.