ஒரு போட்டிக்கு 100 கோடி?… ஒட்டுமொத்தமாக 43,050 கோடி?… வியக்கவைக்கும் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு ஏல உரிமை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளன.
Also Read | ஆழ்துளையில் 10 வயது சிறுவன்.. வாளியில் நீரை நிரப்பி அனுப்பும் ஆச்சர்யம்!.. 55 மணி நேர போராட்டம்..!
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை..
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான, ஐபிஎல் ஒளிபரபப்பு உரிமம் நான்கு பிரிவுகளாக நடைபெறுகிறது. பேக்கேஜ் A பிரிவில் இந்திய தொலைக்காட்சி உரிமமும, B பிரிவில் இந்தியாவின் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான உரிமமும், பேக்கஜ் C- யில் சீசனின் தொடக்க போட்டியும், பிளே ஆஃப் போட்டிகளுக்கான ஏலமும், பேக்கஜ் D-யில் உலக அளவிலான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்திற்கான ஏலம் என நான்காக பிரித்து ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேக்கேஜ் A & B…
பேக்கேஜ் A யில் ஒரு போட்டிக்கான அடிப்படை விலை 48 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுபோல பேக்கேஜ் B க்கான விலை 33 கோடியாக நிர்ணயிக்கப்பட்டதாக சொல்லப் படுகிறது. முதல் நாள் ஏலத்தில் பேக்கேஜ் A க்கான விலை 57 கோடி ரூபாயாகவும், பேக்கேஜ் B க்கான விலை 48 கோடிக்கும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் பேக்கேஜ் A & B மூலம் ஒரு போட்டிக்கான ஏலத்தொகை 105 கோடியாகியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் குறைந்தது 74 போட்டிகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிசிசிஐ-க்கு சுமார் 43,000 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாயாக கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள தகவல்களின் படி பேக்கேஜ் A மற்றும் பேக்கேஜ் B ஆகிய ஊடக உரிமைகள் இரண்டு நிறுவனங்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
முந்தைய உரிமைகள்…
இதற்கு முன்னதாக சோனி மற்றும் ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் ஐபிஎல் ஒளிரப்பு உரிமைகளைப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தகக்து. 2017-2022 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கின் மீடியா உரிமையை 2017 செப்டம்பரில் ரூ. 16,347.50 கோடிக்கு வாங்குவதற்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அதற்கு முன்பாக 2008 ஆம் ஆண்டில், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் 8200 கோடி ரூபாய் ஏலத்தில் 10 ஆண்டுகளுக்கு IPL ஊடக உரிமையை வென்றது. இந்த முந்தைய தொகைகளைக் கணக்கில் கொண்டால் இப்போது கூறப்படும் தொகை மிகப்பெரிய வித்தியாசத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்