'சொல்லவும் முடியல... மெல்லவும் முடியல... குமுறும் வெளிநாட்டு வீரர்கள்'!.. ஐபிஎல் நடக்குமா?.. நடக்காதா?.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் வெளியேறி வரும் நிலையில் அவர்களுக்கு பிசிசிஐ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

'சொல்லவும் முடியல... மெல்லவும் முடியல... குமுறும் வெளிநாட்டு வீரர்கள்'!.. ஐபிஎல் நடக்குமா?.. நடக்காதா?.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாடுகளுக்கு கிளம்பி வருகின்றனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் வெளியேறியுள்ளனர். ஸ்மித் மற்றும் வார்னரும் வெளியேறுவார்கள் எனக்கூறப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகள் விமானத்திற்கு மே 15ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதே போல ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு வீரர்களை நாட்டிற்கு அழைத்துச்செல்ல தனி விமானமும் ஏற்பாடு செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டு வீரர்கள் பெரும் குழப்பத்தில் சிக்கியுள்ளனர். 

இந்நிலையில், அவர்கள் நாடு திரும்ப பிசிசிஐ உத்தரவாதம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு எப்படி சொந்த நாட்டிற்கு திரும்புவது என வீரர்கள் கவலையில் இருப்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால், அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட தேவை இல்லை. அவர்கள் நாடு திரும்புவதற்கு பிசிசிஐ உறுதியளிக்கிறது. 

பிசிசிஐ அனைத்து சூழ்நிலைகளையும் கவனித்து வருகிறது. அனைத்து நாட்டு அரசுகளுடன் பேசி வருகிறோம். மே 30ம் தேதி போட்டிகள் முடிந்தவுடன் வீரர்களை அவர்களது சொந்த பாதுகாப்பாக அனுப்பி வைத்த பிறகு தான் பிசிசிஐக்கு பொறுத்தவரை ஐபிஎல் தொடர் முடிந்தது என்று அர்த்தம். எனவே, வீரர்கள் கவலை கொள்ள தேவை இல்லை எனக்குறிப்பிடப்படுள்ளது.

 

மற்ற செய்திகள்