சாஹா சொன்ன 'அந்த' வார்த்தை!.. அதிர்ந்துபோன சிஎஸ்கே நிர்வாகம்!.. ஐபிஎல்-இல் நடந்தது என்ன?.. மெல்ல மெல்ல அவிழும் முடிச்சுகள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐதாராபாத் வீரர் சாஹா, தனக்கு எங்கிருந்து கொரோனா தொற்று பரவியிருக்கும் எனக்கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்த ஐபிஎல் தொடர், கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்ததன் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு உறுதியான கொரோனா தொற்று பின்னர் ஐதராபாத், டெல்லி, சிஎஸ்கே என அடுத்தடுத்து பரவியது.
கொரோனா பாதித்த வீரர்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை சேர்ந்த விரிதிமான் சாஹாவும் ஒருவர். வைரஸ் அறிகுறிகளுடன் காணப்பட்ட இவருக்கு முதல் 2 பரிசோதனைகளின் போதும் நெகட்டீவ் என வந்த நிலையில் 3வது டெஸ்டில் தொற்று உறுதியானது. மே 3ம் தேதி முதல் சிகிச்சைப்பெற்று வந்த இவர் தற்போது குணமடைந்து வீட்டிற்கு திரும்பிவிட்டார்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து சாஹா பேசுகையில், "நாங்கள் விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தோம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனும் விளையாடினோம். ஒருவேளை எனக்கு விமான நிலையத்தில் கொரோனா பரவியிருந்தால் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாகவே அறிகுறிகள் தெரிந்திருக்கும். ஆனால், எனக்கு மறுநாள் தான் கொரோனா உறுதியானது.
எனக்கு கொரோனா உறுதியான போது, சிஎஸ்கே அணியில் 2 - 4 பேருக்கு அறிகுறிகள் இருந்தன. சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது நான் களத்தில் சில சிஎஸ்கே வீரர்களுடன் கலந்துரையாடினேன். எனவே, அவர்களில் யாரேனும் ஒருவரிடம் இருந்துதான் எனக்கு கொரோனா உறுதியாகியிருக்கும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு விளையாடிய போது வீரர்கள் மற்றொருவருடன் அருகில் இருக்க மாட்டார்கள். பயிற்சி ஆட்டங்களின் போதும் கூட எங்களுடன் யாரும் தொடர்பில் இல்லை. பபுளை யாராலும் உடைக்க முடியாமல் பாதுகாப்பாக இருந்தது. ஆனால், இந்தியாவில் மைதான ஊழியர்களுடன் கூட தொடர்பில் இருந்தோம். இதனால் கொரோனா சுலபமாக பரவியது" என்று கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்