'நானும் பார்த்துட்டே இருக்கேன்... எத்தனை பேரு இதே கேள்விய கேட்பீங்க?'.. விளாசித் தள்ளிய ப்ரைன் லாரா!.. சஞ்சு சாம்சன் சிங்கிள் எடுக்காதது சரியா? தவறா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கடைசி ஓவரில் சிங்கிள் எடுக்க மறுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

'நானும் பார்த்துட்டே இருக்கேன்... எத்தனை பேரு இதே கேள்விய கேட்பீங்க?'.. விளாசித் தள்ளிய ப்ரைன் லாரா!.. சஞ்சு சாம்சன் சிங்கிள் எடுக்காதது சரியா? தவறா?

நேற்று நடைபெற்ற 4வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தி வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றுள்ளது.

ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அனி கேப்டன் சஞ்சு சாம்சன் கடைசி வரை போராடி 119 ரன்கள் எடுத்த போதும் அந்த அணி வெற்றி பெறவில்லை.  

222 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில், அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தன. கேப்டன் சஞ்சு சாம்சன் மட்டும் அதிரடி சதம் அடித்து அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார். இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் 2 பந்துகளில் சிங்கிள்ஸ், 3வது பந்தில் சிக்ஸர் அடித்ததால் 5வது பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. 

ராஜஸ்தான் அணி 2 பந்துகளில் 5 ரன்கள் அடித்து வெற்றி பெற்று விடும் என அனைவரும் நினைத்தனர். களத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் கிறிஸ் மோரிஸ் இருந்தனர். அப்போது 5வது பந்தை சாம்சன் ஓங்கி அடித்து பவுண்டரி மற்றும் சிக்ஸருக்கு போகவில்லை. இதனால் கிறிஸ் மோரிஸ் சிங்கிள் எடுக்க ஓடிவந்த போதும் சாம்சன் சிங்கிள் எடுக்க மறுத்துவிட்டார். இதன் பின்னர் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சாம்சன் தூக்கி அடித்து கேட்ச் அவுட் ஆனார். 

சஞ்சு சாம்சன் ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் ஸ்டிரைக் கொடுக்காமல் போனது தவறு என்று நெட்டிசன்கள் தொடர் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுத்துள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் ப்ரைன் லாரா, சஞ்சு சாம்சனின் முடிவு சரியானது. பவுண்டரிகள் அடிக்க களத்தில் செட்டில் ஆன பேட்ஸ்மேன் தேவை ஒரு வேளை அப்போது அவர் ஓடியிருந்தால் 2வது ரன் எடுக்கும் போது ரன் அவுட் ஆகியிருப்பார். எனவே அவரின் முடிவு சரிதான். 

இதே போல இலங்கை முன்னாள் வீரர் சங்ககராவும் சாம்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சஞ்சு சாம்சன் தனது பொறுப்பை உணர்ந்து ஆட்டத்தை முடித்து கொடுக்கவே சிங்கிள் எடுக்கவில்லை. அனைவரும் அவர் சிங்கிள் எடுப்பதை பார்க்கிறீர்கள். ஆனால், ஆட்டத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என அவருக்கு இருந்த பொறுப்பு மற்றும் நம்பிக்கை பலருக்கும் ஊக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்