'இந்த பிட்ச் நாம நினைக்கிற மாதிரி இல்ல... இதுக்கு வேற 'ஒரு ஆட்டம்' இருக்கு!'.. மாஸ் ப்ளானிங்... செம்ம எக்ஸிகியூஷன்!.. வில்லியம்சன் ஸ்கெட்ச் 'இது' தான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேன் வில்லியம்சன் அபார ஆட்டம் ஆடினார்.
பெங்களூர் அணியில் ஏபி டிவில்லியர்ஸ் எப்படி அணியை கரை சேர்க்க போராடினாரோ, அதைப் போலவே வில்லியம்சனும் தன் அணியை வெற்றி பெற வைக்க போராடினார். ஆனால், மிகவும் நிதான ஆட்டம் ஆடி வெற்றி பெற வைத்தார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது பெங்களூர் அணி. அந்த அணியில் ஆரோன் பின்ச், ஏபி டிவில்லியர்ஸ் மட்டுமே ஓரளவு ரன் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் பெங்களுர் அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.
போட்டி நடந்த அபுதாபி ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. கோலி முதல் டிவில்லியர்ஸ் வரை முக்கிய பேட்ஸ்மேன்களே ரன் குவிக்க திணறினர். அதனால் தான், முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி குறைந்த ஸ்கோர் எடுத்தது.
அந்த மோசமான பிட்ச்சிலும் கூட ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டம் ஆடி இருந்தார். அவர் 43 பந்துகளில் 56 ரன்கள் குவித்து இருந்தார். அவர் கடைசி 2 ஓவர்களில் களத்தில் நின்று இருந்தால் இன்னும் கூட அதிரடியாக ரன் குவித்து இருப்பார்.
இந்த நிலையில், ஹைதராபாத் அணி 132 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சேஸிங் செய்தது. மோசமான பிட்ச் என்பதால் அந்த அணியும் தடுமாறியது. வார்னர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களே எடுத்தனர்.
ஆனால், கேன் வில்லியம்சன் நங்கூரம் போட்டு நின்றார். மிக மிக நிதானமாக ஆடினார். ஒரு கட்டத்தில் அவர் ஸ்ட்ரைக் ரேட் 50-ஐ ஒட்டி இருந்தது. ஆனாலும், அவர் நிதானமாக ஆடி, பின் வேகம் எடுத்தார். 44 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார் வில்லியம்சன்.
அதிரடி ஆட்டம் ஆடவில்லை என்றாலும் சரியாக நிதான ஆட்டம் ஆடி எங்கே ரன் குவிக்க வேண்டுமோ, அங்கே ரன் குவித்து அபாரமாக செயல்பட்டார் வில்லியம்சன். அவரது ஆட்டத்தால் பெங்களூர் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்.
மற்ற செய்திகள்