Karnan usa

'கழுகு மாதிரி காத்திருந்து... சட்டுனு தூக்கிட்டோம்'!.. 'பல நாள் ஸ்கெட்ச்'!.. கோலியின் கண்ணை உறுத்திக் கொண்டிருந்த வீரர்!.. RCB-யின் கேம் ப்ளான் இதோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

குறிப்பிட்ட ஒரு வீரரை டார்கெட் செய்து ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அந்த வீரர் ஆர்சிபி அணிக்கு ஏன் மிகவும் தேவைப்படுகிறார் என்பதை பற்றி காண்போம்.

'கழுகு மாதிரி காத்திருந்து... சட்டுனு தூக்கிட்டோம்'!.. 'பல நாள் ஸ்கெட்ச்'!.. கோலியின் கண்ணை உறுத்திக் கொண்டிருந்த வீரர்!.. RCB-யின் கேம் ப்ளான் இதோ!

ஐபிஎல் 2021 முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது ஆர்சிபி.    

இந்த IPL-ஐ பொறுத்தவரை பல புதுமுக வீரர்களுடன் சிறப்பான வகையில் தயாராகியுள்ளது ஆர்சிபி. அந்த அணியின் முக்கிய வீரராக இந்த சீசனில் க்ளென் மேக்ஸ்வெல் பார்க்கப்படுகிறார்.

கடந்த சீசனில் சொதப்பிய நிலையிலும் அவரது ஆல் ரவுண்டர் பர்பார்மென்ஸ் அணிக்கு தேவை என்று அவர் மீது நம்பிக்கை வைத்து 14.25 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்துள்ளது ஆர்சிபி.  

இந்நிலையில், அவர் மிகச்சிறந்த வீரர் என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி சான்றிதழ் அளித்துள்ளார். ஆர்சிபி வலைதளத்தில் பேசியுள்ள அவர், மாக்ஸ்வெல்லிடம் சிறப்பான நட்பு உள்ளதாகவும், ஆர்சிபியில் இணைந்துள்ளது குறித்து அவர் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.    

மேலும், கடந்த சீசனை போல அல்லாமல் இந்த சீசனில் அவர் அதிகமான எனர்ஜியுடன் உள்ளதாகவும், இதை சமீபத்திய பயிற்சி ஆட்டங்களில் தான் கண்டதாகவும் விராட் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சீசனில் ஆர்சிபியில் மேக்ஸ்வெல்லின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்