'ஆர்சிபி-க்கு ஒரே குஷி தான் போல!.. ஓவரா ஆட வேண்டாம்!.. மொதல்ல 'இத' செய்யுங்க!.. இல்லனா எல்லாமே வீணாயிடும்'!.. விராட் கோலிக்கு வார்னிங் கொடுத்த ஆஷிஷ் நெஹ்ரா!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆர்சிபி அணியின் தொடர் வெற்றிக்கு பின்னால் உள்ள சிக்கலைப் பற்றி ஆஷிஷ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
2021 ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு ஆர்சிபி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 177 ரன்கள் அடித்தது.
அதைத் தொடர்ந்து, 178 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் படிக்கலும், கோலியும் ருத்ரதாண்டவம் ஆடி 10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை சுருட்டி வீசினர். மேலும், அபாரமாக ஆடிய படிக்கல், இந்த சீசனில் தன்னுடைய முதல் சதத்தை நிறைவு செய்தார். பவுலிங்கை பொறுத்துவரை சிராஜ் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
ஆர்சிபி அணியின் வெற்றிப் பயணம் ஐபிஎல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. அடுத்ததாக ஹைதராபாத் அணியுடனான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி. அதைத் தொடர்ந்து, 3வது ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. இதற்கிடையே, நேற்றையை போட்டியிலும் ராஜஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசுர வெற்றியை பெற்றது.
இப்போது வரை பெங்களூரு அணி 4 போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் வெற்றி பெற்று, 8 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிளில் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் பவுலர் ஆஷிஷ் நெஹ்ரா, "ஒரு கேப்டனாக விராட் கோலி சின்ன விஷயங்களை கூட சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. கூர்ந்து கவனிக்கிறார். இந்த சீசனை ஆர்சிபி தொடங்கிய விதத்தையும், அவர்களின் தொடர் வெற்றிகளையும் பார்த்தால், அவர்கள் தங்களுடைய திறமைகளை சுருக்கிக் கொள்ளக் கூடாது. எளிதாக ப்ளே ஆஃப் சென்றுவிடலாம் என்று எண்ணக்கூடாது.
2009ம் ஆண்டு, நான் டெல்லி அணியில் இருந்தபோது நாங்கள் சில புதிய யுக்திகளை முயற்சி செய்து பார்த்தோம். ஆனால், அவற்றை தொடரின் இறுதியில் தான் செய்தோம். ஏனெனில், அப்போது நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி அடைந்திருந்தோம். எனவே, ஆர்சிபி அணியில் புதிய மாற்றங்கள், யுக்திகளை கோலி முயற்சிக்க திட்டமிட்டிருந்தால், முதலில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி அடைவதோடு, பாயின்ட்ஸ் டேபிளில் டாப் 2 இடங்களில் இந்த தொடரை முடிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆர்சிபி அணிக்கு இதைவிட சிறந்த தொடக்கம் இருக்க முடியாது. கோலி, டிவில்லியர்ஸ் மட்டுமின்றி படிக்கல், சிராஜ், சுந்தர் போன்ற இளம் திறமையான வீரர்களை கொண்டுள்ளனர். இவர்களை ஆர்சிபியின் கோர் குரூப்-இல் வைக்க வேண்டும். இந்த சீசனை எப்படி சூப்பர் டூப்பராக ஆர்சிபி அணி தொங்கியதோ, அதே மாதிரி நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்