"வழக்கம்போல வம்பிழுக்கப் பார்த்தாரு... ஆனா, சைனி கொடுத்த 'ஷாக்குல'... இனிமேட்டு வாய் தொறப்பாரு??!!" - மாட்டிக்கொண்டு முழித்த கம்பீர்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று போட்டியில் பெங்களூர் அணியை தேவையில்லாமல் சீண்டிய கம்பீர் வாயடைத்துப்போன சம்பவம் நடந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்குள் கங்குலி காலத்தில் ஆதிக்கம் செலுத்திய வீரர்களுக்கும், தோனி காலத்தில் ஆதிக்கம் செலுத்திய வீரர்களுக்கும் இடையே நீண்ட காலமாகவே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தோனி - சேவாக், தோனி - கம்பீர், கோலி - கம்பீர் இடையே என கடந்த பல வருடமாகவே மோதல்கள் நடந்து வருகிறது. இந்திய அணியின் கேப்டனாக கோலி பொறுப்பேற்ற சமயத்தில் இருந்தே அவருக்கும் கம்பீருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ரோஹித் சர்மாதான் நல்ல கேப்டன், கோலி நல்ல பேட்ஸ்மேன், ஆனால் கேப்டன் கிடையாது எனப் பல முறை கோலியின் கேப்டன்சியை கம்பீர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதிலும் கம்பீர் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தபோது ஒருமுறை பெங்களூர் அணியை கம்பீர் 49 ரன்களுக்கு சுருட்டியது, இருவருக்கும் இடையே சில முறை மோதல்கள் நடந்துள்ளது ஆகியவை இங்கு குறிப்பிட்டத்தக்கது. அப்போதிருந்தே கொல்கத்தா பெங்களூர் மேட்ச் என்றால் கம்பீர் அவ்வப்போது கோலியை விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் நேற்று இதேபோல கம்பீர் இரண்டு கருத்துகளை கூறி சில மணி நேரத்தில் போட்டியில் அதற்கு எதிராக நடக்க அவர் வாயடைத்து போயுள்ளார்.
நேற்று பெங்களூர் - கொல்கத்தா இடையிலான போட்டியில் முதல் இரண்டு ஓவர்களை கிறிஸ் மோரிஸ் மற்றும் சிராஜ் வீச, சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட் விழுந்தது. இதனால் மூன்றாவது ஓவரை மீண்டும் கிறிஸ் மோரிஸ்தான் வீச வேண்டும். வழக்கமாக புதிய பந்தில் கேப்டன்கள் இப்படித்தான் பவுலிங் ரொட்டேஷன் செய்வார்கள். ஆனால் நேற்று கோலி வித்தியாசமாக மூன்றாவது ஓவரை சைனிக்கு கொடுத்தார். இதைப் பார்த்த தொலைக்காட்சியில் பேசிக்கொண்டு இருந்த கம்பீர் கடுமையாக அதைக் கிண்டல் செய்தார்.
புதிய பந்தில் பவுலிங் செய்யும் போது மூன்றாவது ஓவரை புதிய பவுலருக்கு கொடுப்பது என்ன கேப்டன்சி என இது கோலியை கடுமையாக கம்பீர் விமர்சித்தார். ஆனால் அவர் முழுதும் அதை சொல்லி முடிக்கும் முன்னே சைனி அடுத்த பந்தில் சுப்மான் கில் விக்கெட்டை எடுத்தார். இப்படி கம்பீர் தனது கருத்தை சொல்லி முடிக்கும் முன் தன்னுடைய முடிவு சரிதான் என கோலி நிரூபிக்க, அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கம்பீர் என்ன பேசுவது என்றே தெரியாமல் முகம் சிவந்துபோனார்.
அதேபோல நேற்று பேசிய கம்பீர், பெங்களூருக்கு கொல்கத்தா எதிரி கிடையாது. பெங்களூர் ஒரு கோப்பை கூட வென்றது இல்லை. ஆனால் கொல்கத்தா இரண்டு முறை கோப்பை வென்றுள்ளது எனக் கூறினார். ஆனால் நேற்று போட்டியில் கொல்கத்தாவை வெறும் 84 ரன்களுக்கு சுருட்டி பெங்களூர் அதற்கும் பதிலடி கொடுத்தது. இதையடுத்து இனிமேல் தேவையில்லாமல் கம்பீர் கருத்து கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், முக்கியமாக கோலி பற்றி பேசுவதை மொத்தமாக கம்பீர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள்.
மற்ற செய்திகள்