Karnan usa

'சீக்கிரம் சொல்லுங்க... டிஆர்எஸ் கேட்கலாமா வேண்டாமா?.. அய்யோ யாராவது சொல்லுங்களேன்'!.. வாய்ப்பை கோட்டைவிட்ட சாம்சன்!.. மேட்ச்சே மாறி இருக்கும்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சன் முக்கியமான டிஆர்எஸ் ஒன்றை தவற விட்டுள்ளார்.

'சீக்கிரம் சொல்லுங்க... டிஆர்எஸ் கேட்கலாமா வேண்டாமா?.. அய்யோ யாராவது சொல்லுங்களேன்'!.. வாய்ப்பை கோட்டைவிட்ட சாம்சன்!.. மேட்ச்சே மாறி இருக்கும்!!

ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மும்பையில் நடந்தது. பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. இரண்டு அணியிலும் வலுவான பேட்டிங் ஆர்டர் அமைந்தது. அதிரடியாக ஆட கூடிய வீரர்கள் இரண்டு அணியிலும் இடம்பெற்றிருந்தனர். 

இந்நிலையில், முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் சையது முஷ்டாக் கோப்பை தொடரில் கேரளா அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டார். 

அந்த தொடரில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டார். இந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று கேப்டனாக முதல்முறையாக ஆடும் சஞ்சு சாம்சன் கொஞ்சம் டென்ஷனாக இருந்தார்.

முதல் போட்டி என்பதால் கொஞ்சம் பதற்றமாக காணப்பட்டார். மொத்த அணியையும் வழி நடத்த வேண்டும், சர்வதேச வீரர்களுக்கு அறிவுரை கொடுக்க வேண்டும் என்பதால் கொஞ்சம் டென்ஷனாக இருந்தார். இந்த பதற்றம் காரணமாக சஞ்சு சாம்சன் முக்கியமான டிஆர்எஸ் ஒன்றை தவற விட்டார்.

முஸ்தபிசர் போட்ட ஓவரில் மயங்க அகர்வால் எல்பிடபிள்யூ ஆனார். அவுட் கேட்டு அப்பீல் செய்த போது, அம்பயர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. ஆனால், பார்த்தாலே இது எல்பிடபிள்யூ என்று தெரிந்தது. சஞ்சு சாம்சன் ரிவ்யூ கேட்டிருந்தால் விக்கெட். ஆனால் சஞ்சு பதற்றத்தில் இருந்தார். இதனால் ரிவ்யூ கேட்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தார். 

 

அருகில் இருந்த பட்லரிடம் ரிவ்யூ கேட்கட்டுமா என்று கேட்டார். அவரால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இதனால் மயங்க் விக்கெட்டுக்கு ரிவ்யூ கேட்காமல் சஞ்சு சாம்சன் தவறவிட்டார். முதல் முறை கேப்டன் என்பதால் சஞ்சு இந்த தவறை செய்தார். ஆனால் அதற்கு அடுத்து சில பந்துகளிலேயே சக்காரியா ஓவரில் மயங்க் அவுட்டாகி வெளியேறினார்.

மேலும், விறுவிறுப்பாக நடந்து முடிந்த இந்த போட்டியில், பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஒரு வேலை மயங்க் அகர்வாலின் விக்கெட்டை அப்பீல் செய்து அவுட்டாக்கி இருந்தால், ராஜஸ்தான் வென்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு கை நழுவிப்போனது.

 

மற்ற செய்திகள்