Karnan usa

'அப்புறம் என்ன பா... சிக்ஸ்னு அறிவிச்சுடலாம்ல'!.. 'யோவ்... இருய்யா... பவுண்டரி லைன்ல என்னமோ நடக்குது'!.. ஒரு நொடி ஆடிப்போன 3rd அம்பயர்!.. என்ன ஃபீல்டிங் மேன் இது!?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2021 ஐபிஎல் சீசனின் இன்றைய (12.4.2021) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

'அப்புறம் என்ன பா... சிக்ஸ்னு அறிவிச்சுடலாம்ல'!.. 'யோவ்... இருய்யா... பவுண்டரி லைன்ல என்னமோ நடக்குது'!.. ஒரு நொடி ஆடிப்போன 3rd அம்பயர்!.. என்ன ஃபீல்டிங் மேன் இது!?

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் ருத்ர தாண்டவம் ஆடியது.

பஞ்சாப் அணியில் ஓப்பனிங் இறங்கிய அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுலும், பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்தை நாலா பக்கமும் சிதறடித்தனர்.

ராஜஸ்தான் அணி பந்துவீச்சில் என்னென்னவோ மாற்றம் செய்து முயற்சித்த போதிலும், ராகுல்-ஹூடா பார்ட்னர்ஷிப்பை அசைக்க கூட முடியவில்லை. இதன் விளைவாக, பஞ்சாப் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்து 200-ஐ கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 50 பந்துகளில் 91 ரன்களும் (7 ஃபோர், 5 சிக்ஸ்), தீபக் ஹூடா 26 பந்துகளில் 64 ரன்களும் (4 ஃபோர், 6 சிக்ஸ்) குவித்தனர்.

இந்நிலையில், இறுதி ஓவரில் கே எல் ராகுல் பந்தை ஆவேசமாக அடிக்க, அதை சிக்ஸ் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேலையில், பவுண்டரி லைன் அருகே நின்று கொண்டிருந்த ராகுல் திவாட்டியா மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு கேட்ச் பிடித்துவிட்டார்.

பந்து பவுண்டரி லைனைத் தாண்டி பறக்கவிருந்த நிலையில், ராகுல் திவாட்டியா பந்தை எட்டிப் பிடித்து பிட்ச்சுக்குள்ளே சற்று மேலே தூக்கி வீசிவிட்டு பவுண்டரி லைனில் கால் வைத்துவிட்டார். அப்போது, பந்து தரையைத் தொடுவதற்கு முன்பு மீண்டும் பிட்ச்சுக்குள் ஓடிவந்து கேட்ச் பிடித்தார்.

 

 

இந்த ஐபிஎல் சீசன் தொடங்கி 3 போட்டுகளில் நிறைவடைந்த நிலையில், 4வது போட்டியான இன்றைய மேட்ச்சில் ராகுல் திவாட்டியா பிடித்த கேட்ச் தான் மிகச்சிறந்த கேட்ச் ஆகும்.

 

மற்ற செய்திகள்