'அவர டீம்ல இருந்து தூக்குனீங்கனா... அவ்ளோ தான் சொல்லிட்டேன்'!.. 'அவர எப்படி பயன்படுத்தணும்னு தெரியுமா'?.. பஞ்சாப் அணிக்கு பாடம் எடுத்த கம்பீர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்த ஐபிஎல்-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓப்பனிங்கில் முக்கிய மாற்றம் செய்ய வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

'அவர டீம்ல இருந்து தூக்குனீங்கனா... அவ்ளோ தான் சொல்லிட்டேன்'!.. 'அவர எப்படி பயன்படுத்தணும்னு தெரியுமா'?.. பஞ்சாப் அணிக்கு பாடம் எடுத்த கம்பீர்!!

ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணியில் கடந்த ஆண்டு முதல் ஓப்பனிங்கில் கிறிஸ் கெயில் இறக்கப்படுவதில்லை. அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் களமிறங்கி வருகிறார்.  

வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிறிஸ் கெயில் பஞ்சாப் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டி வந்தார். ஆனால், கடந்த ஆண்டு முதல் கே.எல்.ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடி களமிறங்கி வருகிறது. இதனால் 3வது வீரராக களமிறங்கும் கெயில் சரியான பொஷிஷன் இல்லாமல் தடுமாறுகிறார். இந்த சீசனிலும் 3வது வீரராகவே விளையாடி வருகிறார். 

பஞ்சாப் அணி இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் முதல் போட்டியில் மட்டும் கெயில் ஆர்சிபிக்கு எதிராக 40 ரன்கள் அடித்தார். ஆனால், அதற்கு அடுத்த போட்டிகளில் 10,11,15 என சொற்ப ரன்களையே அடித்துள்ளார். தொடக்க ஜோடியும் முதல் போட்டியை தவிர்த்து வேறு போட்டிகளில் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை. இந்நிலையில் தான், இன்றைய போட்டி முதல் கிறிஸ் கெயில் ஓப்பனிங் களமிறக்கப்பட வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் அணியில் உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் டேவிட் மாலன் உள்ளார். எனினும், அவரை விட கெயில் தான் ஓப்பனிங்கிற்கு தேவை என கம்பீர் தெரிவித்துள்ள்ளார். இதுகுறித்து பேசிய அவர், டேவிட் மாலன் நம்பர் 1 வீரராக இருக்கலாம். ஆனால், மைதானத்தின் கள சூழலை வைத்து பார்த்தால் கெயில் தான் ஓப்பனிங் பொசிஷனுக்கு தேவை. ஒரு வேலை கெயிலை 3வது வீரராக களமிறக்கினால், அவர் நிச்சயம் தடுமாறுவார். இதனை அவரது முந்தைய ஆட்டங்களில் பார்க்கிறோம். எனவே, கெயில் ப்ளேயிங் 11ல் இடம்பெற்றால் ஓப்பனிங் தான் இறங்கவேண்டும். 

பஞ்சாப் அணி இதற்கு முன்னர் ஆடிய மும்பை மைதானத்தில் கிறிஸ் கெயில் ஓப்பனிங் இறங்கியிருந்தால், 60 பந்துகளில் சதம் அடித்திருப்பார். அதே போல தான் சென்னை களத்திலும் முதல் 6 ஓவர்கள் முக்கியமானவை. முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை குவித்துக்கொள்ள வேண்டும். அதற்கு கெயிலை விட்டால் வேறு யாரால் முடியும்? அவர் 7வது ஓவர் வரை நின்றுவிட்டால், அவரிடம் நீங்கள் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய கூற முடியாது. ஏனெனில், 7வது ஓவர் வரை நின்றுவிட்டால் அவர் அதிரடி காட்டிவிடுவார் என தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்