IPL 2020: தள்ளிப்போன 'ஐபிஎல்' மேட்ச்... தளபதியின் 'மாஸ்டர்' ஸ்டைலில்... செம 'பஞ்ச்' கொடுத்த 'சென்னை' கிங்ஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக ஐபிஎல் போட்டிகளை தள்ளி வைப்பதாக பிசிசிஐ இன்று மதியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது ஏப்ரல் மாதம் 15-ம் தேதி தொடங்கவுள்ளது.

IPL 2020: தள்ளிப்போன 'ஐபிஎல்' மேட்ச்... தளபதியின் 'மாஸ்டர்' ஸ்டைலில்... செம 'பஞ்ச்' கொடுத்த 'சென்னை' கிங்ஸ்!

இந்த நிலையில் ரசிகர்களின் பேவரைட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது குறித்து பஞ்ச் டயலாக் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அணி மாஸ்டர் விஜய் ஸ்டைலில், '' ஸ்மார்ட் மூவ் நண்பா! ஏப்ரல் 15-ம் தேதி விசில் போடலாம். பத்திரமாக இருங்கள்,'' என ரசிகர்களை கேட்டுக்கொண்டு இருக்கிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் தோனியின் ஆட்டத்தைக் காண இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமா? என்றும், போட்டியை தள்ளி வைத்தது நல்ல முடிவு தான் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.