'இந்த அநியாயத்த கேட்க யாருமே இல்லயா'?.. 'மற்ற வீரர்கள் என்ன கிழிச்சுட்டாங்கனு... இவர மட்டும் இப்படி பண்ணியிருக்கீங்க'?.. ரோகித் சர்மா மீது பாயும் விமர்சனம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றாலும், ரோகித் சர்மாவின் ஒரு முடிவு கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த சீசனில் இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள மும்பை இந்தியன்ஸின் அதிரடி வீரர் இஷான் கிஷான் 73 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக சென்னை ஆடுகளம் பார்க்கப்படுகிறது.
மும்பை அணி இதற்கு முன்னர் ஆடிய 5 போட்டியும் சென்னையில் நடைபெற்றவை ஆகும். அது பேட்டிங்கிற்கு மிகவும் சவாலான ஒரு களம். எனவே, இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக கோல்டர் நைலை சேர்த்தால் பந்துவீச்சிலும் பலம் சேர்க்கும் மற்றும் லோயர் ஆர்டரிலும் பேட்டிங்கிற்கு ஆள் இருப்பார் என திட்டமிடப்பட்டது.
ஆனால், இன்றைய போட்டி டெல்லியில் நடைபெற்றது. எனவே, சென்னையில் ஆடியதை யோசித்து பார்க்காமல் டெல்லி போன்ற பேட்டிங் ஆடுகளத்தில் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்.
சென்னையில் தொடக்க வீரர்களே பெரியளவில் சோபிக்காத நிலையில் இஷான் கிஷானால் எப்படி அதிரடி காட்ட முடியும் என ரசிகர்கள் ரோகித் சர்மாவை விமர்சித்து வருகின்றனர். மேலும் சிலர் மும்பை அணிக்கு சரியான கேப்டனை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் பிரைன் லாரா, "சில சமயங்களில் மும்பை அணி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். சென்னை களத்தில் அனைத்து வீரர்களுமே சிரமப்பட்டனர். ஆனால், இன்றைய போட்டி டெல்லியில் நடைபெறுவதால் இஷான் கிஷானுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். நானாக இருந்தால் அதைதான் செய்திருப்பேன். அப்போது தான் அவரின் ஃபார்ம் நமக்கு தெரியும் எனத்தெரிவித்துள்ளார்.
இஷான் கிஷானுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட நாதன் கோல்டர் நைல் இன்று பெரிய அளவில் சோபிக்காமல் ஏமாற்றமே தந்தார். 4 ஓவர்களை வீசிய அவர் 35 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. இன்றைய போட்டியில் அவர் சேர்க்கப்பட்டு என்ன பலன் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்